உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இழப்பீடு கிடைக்காததால் விவசாயி தற்கொலை

இழப்பீடு கிடைக்காததால் விவசாயி தற்கொலை

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் விவசாயி விஜயபாண்டியன் 73. இவருக்கு சொந்தமான 20 ஏக்கரில் நெல், வாழை பயிரிட்டிருந்தார். கடந்தாண்டு டிச., 17, 18 ல் பெய்த அதி கனமழையால் குளங்கள் உடைத்து நிலம் முழுவதும் மண் சேர்ந்து நெல், வாழை பாதிக்கப்பட்டன. உடைந்த பெட்டை குளத்தை சீரமைக்க இவர் செலவும் செய்துள்ளார். அரசு பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு வழங்குவதாக அறிவித்த இழப்பீட்டுத் தொகை இன்னும் இவருக்கு வழங்கப்படவில்லை. நிலத்தை சீரமைத்து மீண்டும் விவசாயம் செய்வதில் இவருக்கு சிக்கல் ஏற்பட்டது.மனமுடைந்த அவர் விவசாயத்திற்கு பயன்படும் களைக்கொல்லி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விஜயபாண்டியன் குடும்பத்தினர் உள்ளிட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி