உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயிர்க்கடனுக்கு சிபில் ஸ்கோர் விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு

பயிர்க்கடனுக்கு சிபில் ஸ்கோர் விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு

பல்லடம்: 'சிபில் ஸ்கோர் அடிப்படையில் மட்டுமே பயிர் கடன் வழங்கப்படும்' என்ற கூட்டுறவுத்துறை அறிவிப்புக்கு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.பல்லடத்தில், இதன் நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது: விவசாயிகள், விவசாயத்தில் லாபம் பெற முடியாமல், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமலும் இருப்பதாலேயே, தமிழக அரசு அவ்வப்போது பயிர் கடன் தள்ளுபடி செய்கிறது. தேசிய வங்கிகளில் பெற்ற கடன்களை திருப்பி செலுத்த முடியாமல், விவசாயிகள் 'சிபில் ஸ்கோர்' பிரச்னையில் சிக்கியுள்ளனர்.கூட்டுறவு சங்கங்களில் பெறப்படும் கடன்களும்,'சிபில் ஸ்கோரில்' பதிவேற்றம் செய்யப்படும் என்பதால், தேசிய வங்கிகளிலும் இனி விவசாயிகள் பயிர் கடன் பெற முடியாத சூழல் ஏற்படும். விவசாயிகளின் புகலிடமாக உள்ள கூட்டுறவுத்துறை, 'சிபில் ஸ்கோர்' அடிப்படையில் கடன் வழங்கும் அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

venugopal s
ஜூன் 07, 2025 13:28

சிபில் ஸ்கோர் அடிப்படையில் தமிழக விவசாயிகள் யாருமே கடன் பெற முடியாது. ஏனெனில் பெரும்பாலான விவசாய கடன்கள் தள்ளுபடி அல்லது ஒன்டைம் செட்டில்மென்ட் செய்யப் பட்டு இருக்கும். அதனால் அவர்கள் சிபில் ஸ்கோர் திருப்திகரமாக இருக்காது!


Gajageswari
ஜூன் 07, 2025 12:20

விவசாயி என்ற போர்வையில் எதிர்ப்பு. திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் எதற்கு எடுத்தாலும் எதிர்ப்பு.


புரொடஸ்டர்
ஜூன் 07, 2025 09:21

தேர்தலில் போட்டியிட "குற்ற செயல்கள்" என்ற "சிபில் ஸ்கோர்" செயல்படவேண்டும்.


சமீபத்திய செய்தி