உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாயி மர்ம சாவு போலீஸ் விசாரணை

விவசாயி மர்ம சாவு போலீஸ் விசாரணை

மயிலம்: மயிலம் அருகே வயல்வெளியில் மர்மமான முறையில் விவசாயி இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மயிலம் அடுத்த கீழ்எடையாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமால், 44; விவசாயி. இவர், நேற்று முன்தினம் பிற்பகல் 3:00 மணியளவில், வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.இந்நிலையில் நேற்று அதிகாலை 5:30 மணி அளவில் அதே கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது நிலத்தில் கை, கால்களில் தீக்காயங்களுடன் மர்மமான முறையில் திருமால் இறந்து கிடப்பது தெரிய வந்தது. புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி