உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக ஆட்சியில் கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்: இபிஎஸ் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்: இபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: திமுக அரசின் அலட்சியம் காரணமாக விவசாயத்தில் முதல் போட்ட பணத்தைக் கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் கண்ணீர் சிந்துகிறார்கள்,'' அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திமுக அரசின் மோசமான நிர்வாகம் காரணமாக விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளியாக மாறியுள்ளது. அரசின் குளறுபடி காரணமாக நெல்மணிகள் மழையில் நனைத்து முளைவிட்டுள்ளன. உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்ய வக்கற்ற அரசாக திமுக அரசு திகழ்கிறது.கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே சுமார் 2 கிமீ., வரை நெல்மணிகளை கொட்டி வைத்து விடியலுக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள். மழையில் இருந்து பாதகாக்க தேவையான தார்ப்பாய்களை கூட திமுக அரசு கொடுக்கவில்லை. மழையில் நனைத்து நெல்மணிகள் வீணாகும் கொடுமையையும், விவசாயிகளின் கண்ணீரையும் ஊடகங்கள் காட்டிய பிறகும் திமுக அரசுக்கு இரககம் பிறக்கவில்லை.சட்டசபையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சமாளிக்கிறாரே தவிர முழுயைாக நெல் கொள்முதல் செய்வதற்கும், உரிய முறையில் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.நெல் விளைச்சல் அதிகம் என்றால் அதற்கு ஏற்ப முன்கூட்டியே கொள்முதல் தொடங்கியிருக்க வேண்டாமா? தேவையான அளவு கிடங்குகளை தயார் செய்திருக்க வேண்டாமா? குறைந்தபட்சம் மழையில் நனையாமல் பாதுகாப்பதற்கு தார்ப்பாய் போன்ற அடிப்படை வசதிகளையாவது செய்து கொடுத்திருக்க வேண்டாமா?இதை எதையும் செய்யாம் போட்டோஷூட் நடத்துவதற்கும் புதுப்புது பெயர் சூட்டுவதற்கும் மெனக்கெடுவதால் மட்டும் விவசாயிகளின் துயரம் தீர்ந்து விடுமா? விவசாயிகள் முதல் போட்ட பணத்தை கூட எடுக்க முடியாமல் கண்ணீர் சிந்துகிறார்கள்.தமிழகத்தில் கடந்த 2021 முதல் 2023 ம் ஆண்டு வரை மட்டும் 1,968 விவசாயிள் தற்கொலை செய்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது. தமிழக அரசின் குளறுபடிகளால் இந்த எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரிக்கும் அபாயம் தென்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் இபிஎஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

NAGARAJAN
அக் 29, 2025 08:45

இவர் அடுத்த காமெடி பீஸ். . ஏதோ பேசவேண்டும் என்று உளர வேண்டியது. .


chidhambaram
அக் 28, 2025 12:59

விவசாயி மட்டுமா????


S.L.Narasimman
அக் 19, 2025 20:25

இவர்கள் பேனா சிலை, மற்றும் குடும்பங்களோடு ஐந்து வருடங்களாக வெளிநாடுகள் இன்ப சுற்றுலா சென்ற கோடிக்கணக்கான பணத்தை நெல் மூடைகளை சேமிக்கும் குடோன்களை கட்டியிருந்தால் விவசாயிகள் பேரிழப்புக்கு ஆளாகிருக்கமாட்டார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை