உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முற்றியது தந்தை - மகன் மோதல்; அன்புமணிக்கு எதிராக பா.ம.க., செயற்குழுவில் தீர்மானம்

முற்றியது தந்தை - மகன் மோதல்; அன்புமணிக்கு எதிராக பா.ம.க., செயற்குழுவில் தீர்மானம்

சென்னை: திண்டிவனம் அருகே ஓமந்துாரில், இன்று (ஜூலை 08) நடந்த பா.ம.க., செயற்குழு கூட்டத்தில், பொதுவெளியில் ராமதாஸ் பேச்சுக்குக் கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்று, பா.ம.க., செயல் தலைவர் அன்புமணி எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பா.ம.க.,வில் தந்தை- மகன் மோதல் முற்றிய நிலையில், இருவரும் தனித்தனியே செயல்படுகின்றனர். அன்புமணி ஆதரவு மாவட்டச் செயலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை நீக்கிவிட்டு, தன் ஆதரவாளர்களை ராமதாஸ் நியமித்து வருகிறார். பா.ம.க.,வில் நிர்வாகக்குழு, செயற்குழு, பொதுக்குழு என, மூன்று அதிகார அமைப்புகள் உள்ளன.அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுவை கலைத்து விட்டு, 21 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவை ராமதாஸ் அறிவித்தார். அதில் அன்புமணி, அவரது ஆதரவாளர்களான பொதுச்செயலர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர் இடம்பெறவில்லை.இந்நிலையில், இன்று (ஜூலை 08) திண்டிவனம் அருகே ஓமந்துாரில், பா.ம.க., செயற்குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், பொதுவெளியில் ராமதாஸ் பேச்சுக்குக் கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்று, பா.ம.க., செயல் தலைவர் அன்புமணி எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொத்தம் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.* கூட்டணி முடிவை எடுக்க ராமதாசுக்கு மட்டும் அதிகாரம் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.* பொதுவெளியில் ராமதாசின் பேச்சுக்கு கட்டுப்படாமல் இருப்பது, கட்சிக்கும், நிறுவனருக்கும் களங்கத்தை உருவாக்கும் வகையில் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என தீர்மானம்.* தனது செயலுக்கு அன்புமணி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

ராமகிருஷ்ணன்
ஜூலை 09, 2025 11:31

கடைசியில் அண்ணன் டிரம்பு தலையிட்டு இவர்களை சமாதான படுத்தி நோபல் பரிசு வாங்கி விடுவார் போலும்.


Srinivasan Narayanasamy
ஜூலை 09, 2025 03:57

தந்தை மகனுக்கு இடையில் நல்ல ஒரு ஒப்பந்தம். தந்தை : நான் இந்த பக்கம் DMK போய் ஒரு 10 - 15 கிடைத்து, ஜெயிக்க பாக்குறேன் . மகன் : நான் அந்த பக்கம் ADMK போய் ஒரு 10 - 15 கிடைத்து, ஜெயிக்க பாக்குறேன் . ஆக, நாம் தான் முட்டாள்கள்


Anantharaman Srinivasan
ஜூலை 09, 2025 12:02

இரண்டானபின் இவர்களுக்கு இரட்டை இலக்கத்தில் சீட் ஒதுக்க இரண்டு தலைவர்களும் அவ்வளவு முட்டாள்கள் அல்லர்.


KRISHNAN R
ஜூலை 08, 2025 20:40

குடும்ப கட்சிகள் காட்சிகள்.. இனி இப்படி வரணும்.... உண்மை சனநாயம் குடும்ப அரசியல் அல்ல...


அப்பாவி
ஜூலை 08, 2025 20:12

அடடே குலசாமி தண்டிக்குதே...


Nag Vasan
ஜூலை 08, 2025 19:31

தந்தையும் மகனும் தகராறு செய்துவிட்டால் அவர்களின் அரசியலுக்கு இழப்பு.


R Dhasarathan
ஜூலை 08, 2025 18:28

படு பாதாளத்திற்கு தள்ளி விட்டார்கள் வன்னியர்களை. இதற்கான தண்டனை நிச்சயம் இவர்களுக்கு உண்டு


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 08, 2025 17:52

இந்த வருடம் மாம்பழம் சரியாக போட்டியாக வில்லை. விலை கட்டுபடியாகமல் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 08, 2025 17:43

சரிங்க....மொத்த செயற்குழு உறுப்பினர்கள் எத்தனை பேர், அதில் செயற்குழு கூட்டத்திற்கு எத்தனை பேர் கலந்து கொண்டனர்....அ.மணி ஆதரவாளர்கள் வந்தனா ??? அந்த செயற்குழு கூட்டம் செல்லுபடியாகுமா.....போன்ற விவரங்கள் எங்கே....???


GMM
ஜூலை 08, 2025 17:38

சாதிகள் பிறப்பு முதல் இறப்பு வரை இணைந்து இருக்கும். பிறப்பில் உறவினர். திருமணத்தில் பிறந்த, வளர்ந்த ஊர் மக்கள் . இறுதி சடங்கில் வீட்டிற்கு ஒருவர் கட்டாயம். ஒன்றுபட்டு விழாக்கள். அந்த மக்கள் அரசு, தன் தொழிலுக்கு ஒத்த சாதியுடன் இணைந்து வாழ்வர். ஆனால் மரம் வெட்டி வளர்ப்பு எல்லோருக்கும் தெரியும். குடும்ப அரசியல், அதிகார போதை. முடிவு மோதல். திமுகவின் ஊட்ட சத்து சாதி, மத அரசியல். 4 பெரும் சாதிகள் 2 சிறுபான்மை மத வாக்காளர்கள் சாதி, மத அரசியல் விட்டு விலகி சமூக பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள். அரசியலை விட ஒன்றுபட்டு ஏழ்மை நீக்கி இன்பம் காணலாம்.


Thirumal Kumaresan
ஜூலை 08, 2025 17:08

தனக்கு தானே மண்ணை அள்ளி போட்டுக்கொள்கிறார்கள், நம்பி இருந்தவர்களை பற்றி யாரு ஆலோசிப்பது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை