உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளி குடிநீர் தொட்டியில் மலம்; திருவாரூர் அருகே மக்கள் அதிர்ச்சி; 3 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

பள்ளி குடிநீர் தொட்டியில் மலம்; திருவாரூர் அருகே மக்கள் அதிர்ச்சி; 3 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

திருவாரூர்: திருவாரூர் அருகே காரியாங்குடி அரசு தொடக்கப்பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலம் கிடந்ததையடுத்து, போதை ஆசாமிகள் மூன்று பேரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.திருவாரூர் அருகே காரியாங்குடியில் அரசு தொடக்கப் பள்ளியில், 14 மாணவியர் உட்பட, 31 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியின் ஒரே ஆசிரியர் அன்புச்செல்வி, பொறுப்பு தலைமையாசிரியராக பணிபுரிகிறார்.சனி, ஞாயிறு விடுமுறைக்கு பின், நேற்று காலை, உணவு சமைப்பதற்காக, பணியாளர்கள் இருவர் பள்ளிக்கு வந்துள்ளனர். பள்ளி சமையலறையில் இருந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டு கிடந்தன.அங்கிருந்த மளிகை பொருட்களை வைத்து, அசைவம் சமைத்து சாப்பிட்டதற்கான தடயங்கள் இருந்துள்ளன. பள்ளியில் இருந்த வாழை மரங்கள் வெட்டப்பட்டு கிடந்தன. குடிநீர் தொட்டி குழாய்கள், உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தன. இரு நாட்கள் விடுமுறை என்பதால், குடிநீர் தொட்டி நிரப்பப்படவில்லை. தொட்டியில் குடிநீர் இல்லாததால், குடிநீர் குழாயில் தண்ணீர் வரவில்லை.தொட்டியின் அடிமட்டத்தில் தண்ணீர் கிடந்துள்ளது. மேலும், குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. உடன், பொறுப்பு தலைமை ஆசிரியருக்கு, சமையலர்கள் தகவல் தெரிவித்தனர். அவர், கல்வி உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார். அவர்கள், திருவாரூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தனர். கல்வி அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்தனர்.குடிநீர் தொட்டியை பார்த்தபோது, அதில், மலக்கழிவுகள் கிடந்துள்ளன. போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் பள்ளிக்கு அருகில் உள்ள வீட்டிற்கு சென்று படுத்துக்கொண்டது.அந்த வீட்டில் இருந்த சகோதரர்களான விஜய்ராஜ், 32, விமல்ராஜ், 30, ஆகிய இருவரையும் விசாரித்ததில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அதே ஊரை சேர்ந்த செந்தில்குமார், 38, என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.முதல்கட்ட விசாரணையில், பள்ளி விடுமுறை அன்று, பள்ளியில் அமர்ந்து மது அருந்திவிட்டு, இச்செயலில் அவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.மேலும், அசைவம் சமைத்து சாப்பிட்டதில், மூவரில் ஒருவருக்கு வயிற்று உபாதை ஏற்பட்டு, பள்ளி வளாக பகுதியில் மலம் கழித்து விட்டு, குடிநீர் தொட்டியில் இறங்கி கழுவியதாக போலீசார் தெரிவித்தனர்.கலெக்டர் மோகனச்சந்திரன் கூறுகையில், ''பள்ளி குடிநீர் தொட்டியில், மனிதக்கழிவு கிடந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.பள்ளி வளாகத்தில், எஸ்.பி., கருண்கரட் ஆய்வு செய்தார். தொடர்புடைய விஜய்ராஜ், விமல்ராஜ் ஆகியோரது மூத்த சகோதரர் காவல் துறையில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sivabalan
ஜூலை 15, 2025 08:02

விசிக தண்ணீர்னு சொல்லி வித்திடலாம். திருமா மூலமாக...


N Sasikumar Yadhav
ஜூலை 15, 2025 06:22

ஆக அனைத்திற்கும் மூலகாரணமாக இருப்பது திமுக நிர்வாகிகளால் தயாரிக்கப்பட்டு திராவிட மாடல் அரசால் விற்கப்படும் சாராயம் மட்டுமே .


முக்கிய வீடியோ