உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புயல் வரலாற்றில் இது புதுசு! 500 கி.மீ. தொலைவை மெதுவாக கடந்த பெஞ்சல்

புயல் வரலாற்றில் இது புதுசு! 500 கி.மீ. தொலைவை மெதுவாக கடந்த பெஞ்சல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக புயல் வரலாற்றில் 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் 500 கி.மீ., தொலைவை பெஞ்சல் மிக மெதுவாக கடந்துள்ளது.சென்னை, வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை பதம் பார்த்தது. பின்னர் அங்கிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0eh3csge&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0புயலால் உருவான மழையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தற்போது மழை இல்லாவிட்டாலும் மக்கள் இயல்பு வாழ்க்கையை இன்னமும் தொடங்கவில்லை.இந்நிலையில் பெஞ்சல் புயல் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. 50 ஆண்டுகால தமிழக புயல் வரலாற்றில் இது போன்றதொரு மெதுவாக நகர்ந்து, கரை கடந்த புயல் இல்லை என்று வானிலை ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் கூறியதாவது; பொதுவாக புயல்கள் எப்போதும் 250 கி.மீ. முதல் 300 கி.மீ., வரை 10 முதல் 12 கி.மீ., வேகத்தில் பயணிக்கும். ஆனால் பெஞ்சல் புயல் 3 கி.மீ., வேகத்தில் தான் பயணித்தது.500 கி.மீ., தூரத்தை கடக்க 5 நாட்கள் எடுத்துக் கொண்டுள்ளது. புயல்கள் அது உருவான நாளில் இருந்து 3வது நாளில் வலுவிழக்கும். ஆனால் நவம்பர் 25ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான 4 நாட்கள் கழித்து, அதவாது நவம்பர் 29ம் தேதிதான் புயலாக உருமாறியது.கடந்த 50 ஆண்டுகால தமிழக புயல் வரலாற்றில், இப்படி மெதுவாக நகரும் ஒரு புயல் இருந்தது இல்லை. பொதுவாகவே, கடற்கரை பகுதியில் இருந்து ஒரு புயல் கடந்து விட்டால் அது வலுவிழக்கும்.ஆனால், 9 மணி நேரம் ஒரே இடத்தில் நிலைகொண்டு, கடலில் உள்ள ஈரப்பதத்தை நன்றாக உள்வாங்கிக் கொண்டு அதன் பின்னரே மெதுவாக கரை கடக்க ஆரம்பித்து இருக்கிறது. அதிக மழைப் பொழிவை பல மாவட்டங்கள் எதிர்கொண்டதற்கு இதுவே காரணம் எனலாம். வானிலை தரவுகளை மேம்படுத்தப்பட்ட முறையில் கணிக்க, சரியான சிஸ்டம் நம்மிடம் இல்லை என்பதையே இது காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, அரபிக்கடலை நோக்கி பெஞ்சல் புயல் நகரும் போது, திருப்பத்தூர் முதல் தேனி வரை உள்ள 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையமானது, விடுத்திருந்தது, குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

V RAMASWAMY
டிச 03, 2024 10:55

தமிழை சரியாக உச்சரியுங்கள் ப்ளீஸ். அது பெஞ்சல் அல்ல, ஃபெங்கல். தமிழையே சரியாக உச்சரிக்கத் தெரியாத செம்மொழி மாநிலத்தில் ஆங்கில வார்த்தையை தமிழாக்கம் செய்யும் பொழுது தவறு ஏற்படுகிறது, இருந்தாலும் கவனிப்பு தேவை.


Mohan
டிச 03, 2024 10:09

என்ன செய்ய இயற்கை கூட விடியலுக்கு வெண்சாமரம் வீசுது ..ஏன் இங்க பேஞ்ச மழை சென்னைல பெய்திருக்க கூடாதா ...


வைகுண்டேஸ்வரன்
டிச 03, 2024 09:57

யாரும் இங்கே எந்த இயற்கை யையும் பகைத்துக் கொள்ளவில்லையே. இந்த சுற்றுச் சூழல் விஞ்ஞானி ன்னு சொல்லிக்கிறவங்க "மரங்களை வெட்டாதீர்கள், மழை வராது" ன்னு உருட்டினானுங்க. கடலில் ஏதுய்யா மரங்கள்? இயற்கை க்கு வேற வேலையே இல்லை பாருங்க. எந்த ஊரில் அரசியல்வாதி நம்மளை பகைத்துக் கொள்கிறான் னு பார்த்து, அங்கே போய் புயல் வீசுதாம். இதனால் அரசியல்வாதிகளா பாதிக்கப் பட்டார்கள்? அவர்களின் பயிர்கள், வீடுகள், மாடுகள், வண்டிகளா சேதப்பட்டன???


KumaR
டிச 03, 2024 15:35

போன ஆட்சில எட்டு வழி சாலை பரந்தூர் விமான நிலையம் அதுகுஎல்லாம் இயற்கை கெடுக்காதிங்க மக்கள் வாழ்வு போயிரும்னு ஓவரா உங்க துண்டுசீட்டு கத்துனாரு.. இப்பவும் பரந்தூர் மக்கள் விளைநிலங்கள் எடுக்கவேண்டாம் னு போராடிட்டு இருக்காங்க. அதபத்தி எல்லாம் உங்க கொள்ளையடிக்குற திருட்டு திராவிட கூட்டணிக்கு கவலை இல்ல.


M Ramachandran
டிச 03, 2024 09:31

அரசில்வாதிகளின் பேராசையினால் இயற்கையை பகைத்து கொண்டால் விளைவுகள் மிக மோசமாகிவிடும் என்பதை உணர்த்தி உள்ளது இனி வருங்காலம் கேள்விக்குறி தான்.


வைகுண்டேஸ்வரன்
டிச 03, 2024 10:02

ஹா ஹா.. எத்தனை பெரியார் வந்தாலும் சிலர் சிந்திப்பதே இல்லை. இயற்கை ஆணா பெண்ணா? எங்கே வசிக்கிறது? எந்த அரசியல்வாதி பகைத்துக் கொண்டார்? ஸ்டாலினா? இ பி எஸ் ஸா? புதுவையில் ஆட்சி செய்கிற பாஜக உறுப்பினர்களா? போங்க சார். கொஞ்சம் அறிவை யூஸ் பண்ண ஆரம்பியுங்கள்.


முக்கிய வீடியோ