மேலும் செய்திகள்
3 ஆண்டுகளில் 636 கைதிகள் முன்கூட்டியே விடுதலை: ஐகோர்ட்டில் அரசு தகவல்
41 minutes ago | 2
வாரிசுகளுக்கு சீட் கேட்டு தி.மு.க., தலைகள் படையெடுப்பு
2 hour(s) ago | 13
மூணாறில் மீண்டும் உறைபனி இயல்பு வாழ்க்கை பாதிப்பு
6 hour(s) ago
சென்னை: பெரும்பாலான பண்டிகைகள் முடிந்துள்ளதால், பருப்பு வகைகளின் விலை குறைந்து வருகிறது. மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், பருப்பு வகைகள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. தமிழகத்தில், உளுத்தம்பருப்பு, துவரம் பருப்பு உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டாலும், தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு உற்பத்தி இல்லை. பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. நாட்டில், கடந்த ஆண்டு அக்., மாதத்திற்கு பின் பருப்பு தட்டுப்பாடு ஏற்பட்டது.பண்டிகை காலம் துவங்கியதால், பருப்பு வகைகளை, 'ஆன்லைன்' மொத்த வியாபாரிகள் பதுக்கியதே இதற்கு காரணம். இதனால், விலை கிலோவிற்கு, 10 - 20 ரூபாய் வரை உயர்ந்தது.
41 minutes ago | 2
2 hour(s) ago | 13
6 hour(s) ago