உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து; சிறுவன் உட்பட 7 பேர் பலி

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து; சிறுவன் உட்பட 7 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் உட்பட 7 பேர் பலியாகினர்.திண்டுக்கல் திருச்சி ரோட்டில் சிட்டி மருத்துவமனை உள்ளது. 4 மாடிகள் கொண்ட இருந்த மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சை பிரிவுகள் உள்ளன. ஏராளமானோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். வெளிநோயாளிகளாகவும் தினமும் பலர் வந்து செல்வர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=82laya2x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நேற்று(டிச.,12) இரவு 9:30 மணிக்கு மருத்துவமனையின் முதல் தளத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ மளமளவென பரவியது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் 2 லாரிகளில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.மருத்துவமனையில் 100 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்தனர். தீ விபத்து ஏற்பட்டவுடன் அருகில் வசிப்போர், காந்திஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் நோயாளிகள் பலரை மீட்டு வெளியே அழைத்து வந்தனர். இருப்பினும் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த திண்டுக்கல் பால திருப்பதி பகுதியைச் சேர்ந்த மணி முருகன் பலியானார். அவருக்கு உதவியாக வந்த அவரது தாய் மாரியம்மாள், மூன்று வயது குழந்தை உட்பட 7 பேர் தீயில் கருகி இறந்தனர். விபத்து ஏற்பட்டபோது லிப்டில் சிக்கிக்கொண்ட 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். தகவல் அறிந்த அமைச்சர் பெரியசாமி, கலெக்டர் பூங்கொடி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை வேகப்படுத்தினர்.

மரண ஓலம்....

திண்டுக்கல் திருச்சி ரோடு சிட்டி ஆஸ்பத்திரியில் இரவு நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமானோர் காயம் அடைந்தனர். அப்போது ஆஸ்பத்திரியில் உள்ளே இருந்து ஏராளமான மக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். தொடர்ந்து தீ எல்லா பக்கமும் எரிந்தது. தீயணைப்புத் துறையினராலும் தீய முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டது. உள்ளே இருந்த நோயாளிகளை பார்க்க வந்த உறவினர்களும் வெளியே வர முடியாமல் கூக்குரல் இட்டனர். மருத்துவமனையில் உள்ளே இருந்த நோயாளிகளின் உறவினர்கள் வெளியில் நின்றபடி கதறி அழுது கொண்டிருந்தது பார்ப்பவர்கள் மனதை பாதிக்க வைத்தது.

அணிவகுத்த ஆம்புலன்ஸ்கள்..

விபத்து நடந்ததும் உள்ளே இருந்த நோயாளிகளை அதிகாரிகள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி ரோடு முழுவதும் அரை மணி நேரத்திற்கும் மேலாக நூறுக்கும் மேலான ஆம்புலன்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தது.

விபத்திலிருந்து 32 மீட்பு

தீ விபத்தில் சிக்கி இருந்த நோயாளிகள் மற்றும் அவர்களை பார்க்க வந்த உறவினர்கள் உட்பட 32 பேரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து இரவு முழுவதும் பொதுமக்கள் கூட்டம் அப்பகுதியில் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Bhaskaran
டிச 13, 2024 07:36

இந்த விபத்தை காரணம் காட்டி அனைத்து தனியார் மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஆய்வு செய்வதாக சுகாதார துறை அதிகாரிகள் கொஞ்சம் பணம் சம்பாதிப்பார்கள்


D.Ambujavalli
டிச 13, 2024 06:41

தனியார் மருத்துவமனையின் maintenance அவ்வப்போது சரிபார்ப்பதில் கவனம் செலுத்தவில்லையோ, அன்றி மழையாவ், அதன் பின்போ கூட மின்கசிவு ஏற்பட்டிருக்கலாம் உயிர்கள் சம்பந்த விஷயத்தில் சற்று அதிகப்படி கவனம் இருக்க வேண்டாமா? அமைச்சர் தனியார் மருத்துவ மனைக்கு ஓடிவரும் அவசரத்தில் பெரும்பாறை ur உண்டு வீடும் மக்களும் இறந்தபோது இப்படித்தான் பறந்தோடி வந்தாரா? இவருக்கோ, சம்பந்தப்பட்டவர்களுக்கோ சொந்தமாகக்கூட இருக்கலாம்? சுகாதார அமைச்சர் மராத்தான் ஒட்டுப்போயிருப்பார்


Padmasridharan
டிச 13, 2024 04:45

அதென்ன நோயாளிகள் மட்டும்..? மருத்துவர்கள், செவிலியர்கள் எங்கே-என்ன செய்து கொண்டிருந்தார்கள்.. இதற்க்கு முன்னாடியெல்லாம் operation success patient dies இப்ப எல்லாம் current fails patients dying ?Corrupted people in one place kills many in other places


Raj
டிச 12, 2024 23:59

மருத்துவ மனையில் மரண ஓலங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழகத்தின் சாபக்கேடு.


முக்கிய வீடியோ