மேலும் செய்திகள்
ரூ.15 லட்சம் போர்வெல் பைப்புகள் எரிந்து நாசம்
27-Feb-2025
புகையிலை விற்றவர் கைது
06-Mar-2025
கடலூர்: விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள மளிகை கடை குடோனில் தீ விபத்து ஏற்பட்டதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து முற்றிலுமாக சேதம் அடைந்தன. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஜங்ஷன் சாலையில் திருஞானம் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் இரவு பூட்டிவிட்டு சென்று, தற்போது கடை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது மளிகை கடையில் பின்புறம் உள்ள குடோனில் மின்கசிவு ஏற்பட்டு தீ மளமளவென பரவியது. பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் குடோனில் இருந்த பிரிட்ஜ் மற்றும் மளிகை பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இந்த தீ விபத்தினால் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
27-Feb-2025
06-Mar-2025