உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டாசு ஆலை வெடிவிபத்து; உறவினர்கள் சாலை மறியல்!

பட்டாசு ஆலை வெடிவிபத்து; உறவினர்கள் சாலை மறியல்!

விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணத் தொகையை ரூ. 10 லட்சமாக உயர்த்தி தரவேண்டும் என வலியுறுத்திய உறவினர்கள், இறந்தவர்களின் சடலத்தை வாங்க மறுத்து விருதுநகர் அரசு மருத்துவமனை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y4pejyy3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வளாகத்திற்குள் வந்த உறவினர்கள் போலீசார் உடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் எஸ்.பி., கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால், மனவருத்தமடைந்த உறவினர்கள் உடலை வாங்க மறுத்து விட்டனர். பேச்சுவார்த்தைக்கு பின், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M S RAGHUNATHAN
ஜூலை 02, 2025 16:45

முதலில் கீழ் கண்ட சந்தேகங்களுக்கு பதில் தேவை. 1.உரிய உரிமம் பெற்று உள்ளதா 2. உரிமம் காலாவதி ஆகாமல் இருக்கிறதா ? 3. ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்தனரா ? 4. Controller and inspector ஆய்வில் ஏதேனும் குறைகள் கண்டு பிடிக்கப் பட்டதா ,? அவை சரி செய்யப் பட்டதா? 5. தீயணைப்பு துறை நடைமுறைகளை சரியாக இந்த தொழிலகம் பின் பற்றியதா என்பதை ஆய்வு செய்தார்களா ? 6. Compensation ஏன் அரசு நிதியில் இருந்து கொடுக்கப் பட வேண்டும் ? தொழிற்சாலை உரிமையாளர் தான் கொடுக்க வேண்டும். இது என்ன ஸ்டாலின் அவர்களின் அப்பன் வீட்டு பணமா இம்மாதிரி சொன்னது உதயநிதி ஸ்டாலின். நினைவிருக்கிறதா?


சமீபத்திய செய்தி