உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டாசு குடோன் வெடிவிபத்து: தர்மபுரி அருகே 3 பெண்கள் பலி

பட்டாசு குடோன் வெடிவிபத்து: தர்மபுரி அருகே 3 பெண்கள் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தர்மபுரி: தர்மபுரி அருகே பட்டாசு குடோன் வெடி விபத்தில் 3 பெண்கள் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே சின்ன முறுக்கம்பட்டியில் பட்டாசு குடோன் செயல்பட்டு வருகிறது. இங்கு பட்டாசு தயாரித்து, இருப்பு வைத்திருந்துள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=63q7aie3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று மதியம் அங்கு தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மூன்று பேர் உடல் சிதறி பலியாகினர்.உயிரிழந்த மூன்று தொழிலாளர்களும் பெண்கள் என்பது தெரிய வந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.உயிரிழந்தவர்கள் திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகியோர் என தெரியவந்துள்ளது.வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். விபத்து நடந்த இடத்தில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் நேரில் ஆய்வு நடத்தி வருகிறார்.ரூ.4 லட்சம் நிதி உதவி:தர்மபுரி தனியார் பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sudha
பிப் 24, 2025 19:50

இதனால் எவ்வளவு வேலை வாய்ப்பு பாருங்க, உயிரிழந்த பேருக்கு அரசு உதவி, அதற்கு போட்டோ, பணம் கொடுக்க ஒரு அதிகாரி, இதை எலெக்ஷன் கூட்டங்களில் பேச பீரங்கிகள் , யார் என்ன செய்ய தவறினர் என்று கூவ ஒரு கூட்டம், வெற்றிலை மென்று கொண்டு ஓர் ஆணையம் உயிர்கள் வெறும்.....யிர்கள்


அனிதாகுமார்
பிப் 24, 2025 17:23

மூணு லட்சம்... மூணு லட்சம்... அப்பா திட்டம்.


சின்ன சுடலை ஈர வெங்காயம்
பிப் 24, 2025 18:40

நாலு லட்சம். டோப்பா திட்டம்.


தமிழன்
பிப் 24, 2025 17:17

மாதத்திற்கு ஒரு வெடி விபத்து தொடர்கதையாகி விட்டது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத இந்த தொழிலில் ஏன் ரோபோக்களோ அல்லது ஏதாவது இயந்திரமோ ஈடுபடுத்தக் கூடாது?? செலவு அதிகமாகும்தான் அதற்காக உயிர்களை பலி கொடுப்பது கொடுமை


Sudha
பிப் 24, 2025 16:59

வெடியல் அரசு வாழ்க


KavikumarRam
பிப் 24, 2025 16:55

கஞ்சா, கள்ளச்சாராயம், களவு, கற்பழிப்பு, கடத்தல், கொலை, கொள்ளை போல படடாசு குடோன் வெடிக்கிறது எல்லாம் ஒரு மேட்டரா??? பத்தோடபதினொன்னா இதையும் தூக்கி போட்டுட்டு இந்தி லெட்டரை போர்டுல அழிக்கிற முக்கியாமான வேலைய பாருங்கப்பா. வேல மெனெக்கெட்டு இதெல்லாம் ஒரு செய்தின்னு போட்டுக்கிட்டு.


புதிய வீடியோ