உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 5 முனை போட்டி; 2026ல் கூட்டணி ஆட்சி; கணித்தார் அண்ணாமலை

தமிழகத்தில் 5 முனை போட்டி; 2026ல் கூட்டணி ஆட்சி; கணித்தார் அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில் 5 முனை போட்டி நிலவி வருகிறது. 2026ம் ஆண்டு தமிழகத்தில் யார் ஆட்சி அமைத்தாலும், கூட்டணி ஆட்சி தான் அமையும்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தனியார் செய்தி சேனலுக்கு அண்ணாமலை அளித்த பேட்டி: அரசியலுக்கு வந்துள்ள விஜயை நான் வரவேற்கிறேன். உச்சத்தில் இருக்கும் ஒரு மனிதர் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார். அரசியலில் ஏற்ற, இறக்கங்களை சந்திப்பார். துரோகிளை சந்திப்பார். கருணாநிதி, ஜெயலலிதாவைப் போல் நீண்ட அரசியல் பயணத்தை மேற்கொள்ளட்டும். ஒரு தேர்தலில், எதையும் மாற்ற முடியாது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=znqdnhcl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

5 கட்சிகள்

தமிழகத்தில் இன்றைக்கு, தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., நாம் தமிழர், த.வெ.க., என 5 முனை போட்டி நிலவுகிறது. 5 கட்சிகளும் வெவ்வேறு அரசியலை முன்னெடுத்து வருகின்றன. தி.மு.க., சரியாக அரசியல் பண்ணுகிறோம் என்று சொல்கிறார்கள். அ.தி.மு.க., சரி செய்வோம் என்று சொல்கிறார்கள். பா.ஜ., புது அரசியலை கொண்டு வருவோம் என்று சொல்கிறோம். சீமான் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கிறார்.

கூட்டணி ஆட்சி

எல்லோரும் ஒன்றியணைய வேண்டும் என்பது நயினார் நாகேந்திரன் ஆசைப்படுகிறார். 2026ம் ஆண்டை பொறுத்தவரை எல்லோரும் தெளிந்து ஓட்டு போட போகிறார்கள். 2026ம் ஆண்டு தமிழகத்தில் யார் ஆட்சி அமைத்தாலும் கூட்டணி ஆட்சி தான் அமையும். களம் மாறிவிட்டது. 2026ம் பா.ஜ., தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று எனக்கு ஆசை. இன்றைய காலகட்டத்தில் கூட்டணி அமைப்பது என்பது சாத்தியமில்லை. மாநில தலைவராக இருக்கும் நான் கவனத்துடன் பேச வேண்டும். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., த.வெ.க.,வுடன் கூட்டணி இல்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 70 )

xyzabc
டிச 26, 2024 13:32

200 ரூ கூட்டம் இருக்கும் வரை, தமிழகம் மாறாது. மாற விட மாட்டார்கள் இந்த தி மு க , வி சி க திருடர்கள். பிரியாணி, டாஸ்மாக் இவை நன்கு வேலை செய்யும். லோக்சபா தேர்தல் ஒன்றே சாட்சி . நியாயத்திற்கு இடம் இல்லை.


ஜெய்ஹிந்த்புரம்
டிச 26, 2024 06:35

2026 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., த.வெ.க.,வுடன் கூட்டணி இல்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார். இன்னிக்கி இந்த வாயி .. நாளைக்கி என்ன வாயோ


Madras Madra
டிச 21, 2024 12:39

எல்லோரும் எதிர்பார்ப்பதை போல விஜய்க்கு அவ்ளோ வோட்டெல்லாம் கிடைக்காது பா ஜ க வின் அரசியலுக்கு அண்ணாமலைக்கு ஒரு மதிப்பு இருக்கிறது அது வளரும் மத்தபடி பா ஜ க வோ அ தி மு க வோ வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது கடினம் தான்


AMLA ASOKAN
டிச 21, 2024 08:39

அண்ணாமலையின் முன்னுக்குப்பின் முரணான தீரமிக்க பேருரை : " 2026ம் ஆண்டு தமிழகத்தில் யார் ஆட்சி அமைத்தாலும் கூட்டணி ஆட்சி தான் அமையும்". " இன்றைய காலகட்டத்தில் கூட்டணி அமைப்பது என்பது சாத்தியமில்லை" .


Mohdgilani
டிச 20, 2024 12:18

தீய மூக அழிவது தான் எல்லோருக்கும் நல்லது.


Palanisamy T
டிச 20, 2024 03:25

கூட்டணி ஆட்சியா? வந்தால் பாஜக, மத்திய ஆட்சியாளர்களுக்கு நிறைய லாபம். அவர்களுக்கும் கொண்டாட்டம். நாளையோ, நாளை மறுநாளோ தமிழகம் கூட்டிச் சுவராகி விடும். இந்த நல்ல எண்ணம் உங்களுக்கு இனி எப்போதும் வரக்கூடாது. தமிழகத்திற்கு என்றும் நிலையான ஆட்சிவேண்டும். மேலிடத்தில் உங்கள் எஜமானர் சொல்லித்தான் இப்படி நடந்துக் கொள்கின்கிறீர்களா? குடும்ப ஆட்சிக்கு மட்டும் முற்றுப் புள்ளி வைத்து விட்டால் போதும். அதுவே தமிழக மக்களுக்கு நல்லதாக அமைந்துவிடும். அதை முதலில் செய்யுங்கள்.


venugopal s
டிச 19, 2024 20:14

தமிழக தேர்தலில் யாரை ஜெயிக்க விட்டாலும் பாஜகவை மட்டும் ஜெயிக்க விட மாட்டோம்!


hari
டிச 19, 2024 21:31

திமுக சமாதி ரெடி ஆகுது


RAMAKRISHNAN NATESAN
டிச 20, 2024 14:17

என்ன செய்வீர்கள் ???? ஆங்காங்கே வாக்குப்பதிவை நிறுத்தி உங்கள் ஆட்களை வைத்து வாக்குப்பதிவு செய்வீர்களா ???? சாவடிகளைக் கைப்பற்றுவீர்களா ???? அப்படியென்றால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜக மோசடி செய்துவிட்டது என்று அழுவது ஏன் ????


Sivasankaran Kannan
டிச 24, 2024 10:25

திராவிட சொம்புக்கு Rs. 200 பார்சல்


Raj S
டிச 19, 2024 19:40

போச்சு... எல்லா திருட்டு திராவிட கை கூலிகளும் இப்போ இங்க வந்து கதறுவானுங்க...


வைகுண்டேஸ்வரன் V
டிச 19, 2024 19:23

கூட்டணி ஆட்சி தமிழ் நாட்டில் வராது. திமுக கூட்டணி தான் அதிக இடங்களில் வெற்றி பெறும். இதில் திமுக தனிப் பெரும்பான்மை பெறும். ஆட்சி அமைக்கும். எனவே அமைச்சரவையில் வேறு கட்சியைச் சேர்ந்த யாரும் இடம் பெற மாட்டார்கள்.


hari
டிச 19, 2024 21:29

கனவு காண GST officer ku உரிமை உண்டு


veera
டிச 19, 2024 21:32

gazetted officer என்று சொல்லிய அண்ட புளுகன்


veera
டிச 20, 2024 14:06

நம்புங்க வைகுண்டம் திராவிட முட்டு கிடையாது


Raja Vardhini
டிச 19, 2024 19:15

தமிழக பி.ஜே.பியை முட்டு சந்துக்கு கொண்டு சென்ற புண்ணியவான், இந்த அண்ணாமலை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை