மேலும் செய்திகள்
திருமூர்த்திமலை கோவிலை மழை வெள்ளம் சூழ்ந்தது
09-Oct-2024
தென்காசி:பழைய குற்றாலத்தில் நேற்று மாலையில் பெய்த பலத்த மழையால் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.திருநெல்வேலி ,தென்காசி மாவட்டங்களில் நேற்று பகலில் மழை பெய்தது. தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை கொட்டியது. குறிப்பாக பழைய குற்றாலம் மலைப்பகுதியில் மாலை 3:00 மணியளவில் பெய்யத் துவங்கிய மழையால் மாலையில் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இரவில் குற்றாலம் மெயின் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
09-Oct-2024