உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 8,000 கனஅடிநீர் வெளியேற்றம்

சென்னை அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 8,000 கனஅடிநீர் வெளியேற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள பெஞ்சல் புயல் மெல்ல, மெல்ல நகர்ந்து வருகிறது. மரக்காணம், மாமல்லபுரம் இடையே இன்று மாலை கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ud5hcbyo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தாம்பரம், வண்டலுர், முடிச்சூர், மண்ணிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. தொடர்ந்து, பெய்து வரும் கனமழையினால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் தேங்கி நிற்கின்றன. அதேபோல, சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக, அடையாறு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், ஆற்றில் இருந்து 8 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.அடையாறு ஆற்றில் செல்லும் வெள்ளநீர், சென்னை விமான நிலைய ஓடுபாதையில் புகுந்தது. இதனால், விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை நீடிக்கும் பட்சத்தில் அடையாறு ஆற்றில் இருந்து வெளியேறும் நீரின் அளவும் அதிகரிக்கும்.இதன் காரணமாக, அடையாறு ஆற்றின் கரையோரப் பகுதிகளான ஈக்காடு தாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர் புரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பீதியில் உள்ளனர். எனவே, கரையோரம் உடைப்பு ஏற்படாமல் இருக்க மணல் மூட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

சாண்டில்யன்
டிச 01, 2024 00:46

ஆகாய தாமரையை அழிக்க விவசாயத் துறையினர் களைக்கொல்லி மருந்துகள் கண்டு பிடித்ததை போல இவற்றை அழிக்கும் ஒரு கெமிக்கல் கண்டு பிடிக்க வேண்டும். இதற்கு எந்த வெளிநாட்டு வல்லுனர்களின் உதவியையும் நாடலாம் அரசு GLOBAL TENDER கோரலாம்


Ramesh Sargam
நவ 30, 2024 20:30

ஒரு காலத்தில் அந்த அடையாறு நீர் அவ்வளவு சுத்தமாக இருக்கும். மக்கள் தொகை பெருகி, ஆற்றின் அருகில் குடியேறி, வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மற்றும் அருகில் அமைந்துள்ள தொழிற்சாலையின் கழிவு அந்த அடையாற்றில் கலந்து... ஆறே கழிவு நீர் ஆறாகிவிட்டது. மற்ற நாடுகளிலும் ஆற்றின் அருகில் மக்கள் குடியேறுகிறார்கள். ஆனால் இங்கு நடப்பதுபோல அட்டூழியம் அங்கு இல்லை. அந்த அளவுக்கு ஆற்றை அவர்கள் சுத்தமாக வைத்திருப்பார்கள். இத்தனைக்கும் ஆறுகளை தெய்வமாக மதிக்கும் நம் நாட்டில் ஆற்றை எப்படி போற்றிப்பாதுகாக்கவேண்டும் என்று தெரியவில்லை. நம் நாட்டு மக்கள் திருந்தவேண்டும். சுத்தமாக வைத்திருக்க தெரிந்திருக்கவேண்டும்.


அப்பாவி
நவ 30, 2024 17:29

தத்திகள்... அவ்வளவு ஆகாயத் தாமரையை வருஷம் முழுக்க வளர்த்து இன்னிக்கி தண்ணி போக முடியாம... இதெல்லாம் ஒரு நிர்வாகம்... கடந்த நூறு வருஷமா இதே நிர்வாகம்தான். தத்திகள் மட்டும்தான் மாற்றம்.


raja
நவ 30, 2024 17:57

அப்பாடா.. இப்போ தான் அப்பாவி தன் தலைவர்களை சின்ன தத்தி பெரிய தத்தின்னு ஒத்துகிட்டாரு...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை