உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வயநாட்டில் மலர் கண்காட்சி திரளான மக்கள் பங்கேற்பு

வயநாட்டில் மலர் கண்காட்சி திரளான மக்கள் பங்கேற்பு

பந்தலுார் : நீலகிரி மாவட்ட எல்லையான, தாளூர் சோதனை சாவடியை ஒட்டி, கேரளா மாநிலம், வயநாடு அம்பலவயல் பகுதி அமைந்துள்ளது.இங்கு, 1946ல் சென்னை மாகாண கட்டுப்பாட்டில் வேளாண் ஆராய்ச்சி நிலையம் செயல்பட துவங்கியது. தொடர்ந்து, 1956ல் மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலையமாகவும், 1972ல் கேரளா மாநில அரசு தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில், மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையமாக செயல்பட துவங்கியது. இங்கு, நெல், காபி, குறுமிளகு, இஞ்சி, மஞ்சள் உள்ளிட்ட மலை விலை பொருட்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு விவசாயம் சார்ந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கடந்த, எட்டு ஆண்டுகளாக இங்கு ஜன., மாதம் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, 10-ம் தேதி துவங்கிய கண்காட்சியில், 2.5 ஏக்கரில் 800 வகையான ரோஜா பூக்கள், மற்றும் 10 ஏக்கர் பரப்பளவில், 100க்கும் மேற்பட்ட மலர் ரகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. மேலும், செயற்கை நீரூற்று, பொழுது போக்கு அம்சங்கள் என, 100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் வைக்கப்பட்டு இருந்தன. தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த ஒரு லட்சம் பார்வையாளர்கள் பூக்களை பார்த்து ரசித்து உள்ளனர். நேற்று இந்த கண்காட்சி நிறைவு பெற்றது. ஊட்டிக்கு அடுத்தபடியாக, நீலகிரி மாவட்டத்தை ஒட்டிய வயநாடு பகுதியில், நடைபெற்ற மலர் கண்காட்சி எல்லையோர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை