உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டம் - ஒழுங்கில் கவனம் செலுத்துங்கள்: புதிய கலெக்டர்களுக்கு முதல்வர் அறிவுரை

சட்டம் - ஒழுங்கில் கவனம் செலுத்துங்கள்: புதிய கலெக்டர்களுக்கு முதல்வர் அறிவுரை

சென்னை: 'சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதில், கலெக்டர்கள் கவனம் செலுத்த வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.புதிதாக நியமிக்கப்பட்ட கலெக்டர்கள் சதீஷ் -- தர்மபுரி, சரவணன் -- திண்டுக்கல், பிரதாப் - - திருவள்ளூர், தினேஷ்குமார் -- கிருஷ்ணகிரி, ஷேக் அப்துல்லா ரகுமான் -- விழுப்புரம், தற்பகராஜ் -- திருவண்ணாமலை, மோகனசந்திரன் -- திருப்பத்துார், சுகுமார் -- திருநெல்வேலி, சிவசவுந்தரவள்ளி -- திருவாரூர் ஆகியோர், சென்னையில் நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர்.அவர்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

அடிப்படை தேவை

மக்களுடன் நேரடி தொடர்பில், களத்தில் இருப்பவர்கள் கலெக்டர்கள். அரசின் முத்திரை திட்டங்கள், அன்றாடம் செயல்படுத்தும் திட்டங்கள், மக்கள் நலத் திட்டங்கள், அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் திட்டங்களில், கலெக்டர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.அரசு அலுவலகங்களுக்கு சென்று, திடீர் ஆய்வு நடத்த வேண்டும். மக்கள் குறை தீர்ப்பு முகாம் மனுக்கள் மீதும், முதல்வரின் முகவரி மனுக்கள் மீதும் சிறப்பு கவனம் செலுத்தி, தீர்வு காண வேண்டும். அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்களிடம் கனிவுடன் நடந்து, அவர்களின் குறைகளை தீர்த்து வைக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.சட்டம்- - ஒழுங்கை நிலைநாட்டுவதில், எஸ்.பி.,க்களுடன் இணைந்து, மாவட்டங்களில் உள்ள பிரச்னைகள் குறித்து கலந்தாலோசித்து, தீர்வு காண வேண்டும். 'எங்கள் கலெக்டர், சிறந்த கலெக்டர்' என, மக்கள் பாராட்டும்படியாக பணியாற்ற வேண்டும்.

ஆய்வு

'முதல்வரின் காலை உணவு, மக்களைத் தேடி மருத்துவம்' போன்ற திட்டங்களின் செயல்பாடுகளை நேரடியாக களத்திற்கு சென்று, ஆய்வு செய்ய வேண்டும். 'கலைஞர் மகளிர் உரிமை தொகை, புதுமை பெண், தமிழ் புதல்வன்' போன்ற திட்டங்களை கவனமாக கண்காணித்து, தகுதியுள்ள ஒவ்வொருவருக்கும் பலன் சென்று சேருவதை உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தலைமை செயலர் முருகானந்தம், பொதுத் துறை செயலர் ரீட்டா ஹரீஷ் தக்கர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Sriram
பிப் 02, 2025 19:47

கமிசன் வாங்கிக்கொண்டு பேசாம உங்கவேலையை செய்யுங்க என்று சொல்லுகிறார்


sankar
பிப் 02, 2025 17:01

இருந்தாத்தானே


Sivakumar
பிப் 02, 2025 16:17

Payanaarkalukku, arasin payan-miku thittangalin palankal sendru adaikiradhaa endru Maavatta seyalaalarkalai mudukki vittu velai vaanga vendum CM avargale. Only Vote booth related work happens very efficiently!!!


Barakat Ali
பிப் 02, 2025 14:46

எங்க கட்சி சார்களையும் அனுசரிச்சு போங்க.... அதே சமயம் சட்டம் ஒழுங்கையும் காப்பாத்துங்க ......


M Ramachandran
பிப் 02, 2025 12:26

சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதில், கலெக்டர்கள் கவனம் செலுத்த வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அது உங்கள் கையிலே தானெ யிருக்கு. அது உங்கள் உங்கள் குடும்ப தலையீடு இல்லாமல் இருந்தால் நடக்கும்.


theruvasagan
பிப் 02, 2025 11:23

பீறிட்டு வருகிற சிரிப்பை அடக்க முடியாமல் கலக்டர்கள் ரொம்ப சிரமப் பட்டாங்களாம்


தேவராஜன்
பிப் 02, 2025 11:02

ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுத கதையாவுள்ள இருக்குது.


அப்பாவி
பிப் 02, 2025 07:51

கலெக்டர்கள் தங்களுக்குள் நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டதாக செய்தி வந்தால் நாம் பொறுப்பல்ல.


Kasimani Baskaran
பிப் 02, 2025 07:32

சட்டம் ஒழுங்குக்கு காவல்துறை பொறுப்பு. ஆட்சியர் மற்ற நிர்வாகத்தை கவனிப்பார்கள். யாராவது நிர்வாகம் தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.


Sudha
பிப் 02, 2025 07:10

மாதம்தோறும் 10 கிரிமினல்களை பிடிக்க வேண்டும் என்று சொல்லுங்க