உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் நான்வெஜ் ஸ்வீட்டா கைவிரிக்குது உணவு பாதுகாப்பு துறை

தமிழகத்தில் நான்வெஜ் ஸ்வீட்டா கைவிரிக்குது உணவு பாதுகாப்பு துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:'கொழுப்பு கலந்த இனிப்புகளை சாப்பிட்டால், ரத்தக் குழாய் அடைப்பு ஏற்படும். தமிழகத்தில் இதுவரை அவ்வாறான இனிப்புகள் தயாரிக்கப்படவில்லை' என, உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் கூறியதாவது:

மாட்டு எலும்புகளை உருக்கி, அதிலிருந்து செய்யப்படும் நெய்களை உணவுப் பொருட்களில் பயன்படுத்தக் கூடாது. 'பாமோலின்' என்ற தாவர எண்ணெய் மற்றும் விலங்குகளின் கொழுப்புகள் வாயிலாக தயாரிக்கப்பட்ட லட்டுகளின் சுவை, அசல் நெய்யில் செய்த லட்டின் சுவையில் இருந்து நிச்சயம் மாறுபட்டிருக்கும்.அவற்றை நம்மால் சாப்பிட முடியாது. அதன் வாசம், சாப்பிடும் முன் நமக்கு தெரிந்து விடும். மேலும், லட்டு போன்ற உணவுப் பொருட்களில் விலங்கு கொழுப்புகளை பயன்படுத்துவது மிகவும் சிரமமானது.தமிழகத்தில் ஒரு சில இடங்களில், பாமோலின் கலந்த தரம் குறைவான லட்டுகளை குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர்; கலர் சாயங்களையும் கலக்கின்றனர்.விலங்கு கொழுப்புகளில் இருந்து தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை உட்கொண்டால், ரத்தக் குழாய் அடைப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை அதிகரிப்பு, கண் பார்வை இழப்பு, நெஞ்சு வலி போன்றவை ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.தமிழக உணவு பாதுகாப்பு துறை கூடுதல் கமிஷனர் தேவ பார்த்தசாரதி கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை விலங்கு கொழுப்புகள் கலந்த நெய்யில் இனிப்புகள் தயாரிக்கப்படவில்லை. அவை தொடர்பான புகார்களும் பெறப்படவில்லை.அவ்வப்போது நடத்தப்படும் ஆய்விலும், வழக்கமான முறைகளில் தான் இனிப்புகள் தயாரிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Sivagiri
செப் 21, 2024 13:28

ஒரு சில பழைய நிறுவனங்கள் தயாரிக்கும் எண்ணெய்களை தவிர / ஒரு சில , பழைய பாரம்பரியமான ஓட்டல்களை தவிர , , இப்போ உள்ள , கிட்டத்தட்ட எல்லா உணவு பொருள்கள் , எண்ணெய்களுமே , எண்ணெய்யே கிடையாது - நிறம் திடம் வாசம் எல்லாம் இதுதானய்யா ஒரிஜினல் என்று சொல்லும் அளவுக்கு பிளேவர் வந்து விட்டது - - - ஷார்ட் டைம்ல - மார்க்கெட்டை புடிக்கணும் , ஷார்ட் டைம்ல கோடீஸ்வரான ஆயிடனும் என்கிற போட்டியில் , என்னவெல்லாம் செய்ய முடியுமோ - செய்கிறார்கள் - குண்டர்களை செக்யுரிட்டிகளாக வைத்துக் கொண்டு , யாராவது குற்றம் குறை சொன்னாலும் , சொன்னவனை , கொன்றே போடும் அளவுக்கு , மனப்பாங்கு வந்து விட்டது . . .


ஸ்ரீ
செப் 21, 2024 12:29

K.S ன் GHEE MYSURPA ORIGINAL GHEE தானா


Ramesh Sargam
செப் 21, 2024 12:05

இந்த செய்தியை படித்தபிறகு வெளியிடங்களில் எதையுமே சாப்பிடக்கூடாது என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு உணவுப்பொருட்களில் கலப்படம். காவல்துறை சரியில்லை, நீதித்துறை சரியில்லை, அரசாங்கம் சரியில்லை. கலப்படக்காரர்களுக்கு இவை போருமே, அவர்கள் கலப்பட தொழிலை திறமையாக செய்ய...


Ramesh Sargam
செப் 21, 2024 12:05

இந்த செய்தியை படித்தபிறகு வெளியிடங்களில் எதையுமே சாப்பிடக்கூடாது என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு உணவுப்பொருட்களில் கலப்படம். காவல்துறை சரியில்லை, நீதித்துறை சரியில்லை, அரசாங்கம் சரியில்லை. கலப்படக்காரர்களுக்கு இவை போருமே, அவர்கள் கலப்பட தொழிலை திறமையாக செய்ய...


அருணாசலம்
செப் 21, 2024 11:28

வழக்கமான முறையில் தயாரிக்கப்பட்ட இனிப்பு என்றால் என்ன?


Iyer
செப் 21, 2024 09:20

 நாம் கடைகளில் வாங்கும் FOOD INGREDIENTS களில் 99 % கலப்படம் செய்யப்பட்டவை தான்.  அதை எந்த அரசாலும் கட்டுப்படுத்தவோ நிறுத்தவோ முடியாது.  "உலகில் எல்லா நாடுகளிலும் இதே கதிதான்"


Iyer
செப் 21, 2024 09:19

 பச்சை மஞ்சளை வாங்கி காயவைத்து பொடிசெய்து வருடம் முழுவதிற்கும் தேவையான மஞ்சள் பொடியை கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொள்ளுங்கள.  கடைகளில் வாங்கும் மஞ்சள் பொடியில் அபாயகரமான ரசாயனங்களை கலக்கிறார்கள்.


Iyer
செப் 21, 2024 09:18

• மிளகு சீரகம் வாங்கி காயவைத்து பொடிசெய்து வருடம் முழுவதிற்கும் தேவையான மிளகு சீரகம் பொடியை கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொள்ளுங்கள. • கடைகளில் வாங்கும் மிளகு சீரகம் பொடியில் அபாயகரமான ரசாயனங்களை கலக்கிறார்கள்


Iyer
செப் 21, 2024 09:17

o கடையில் விற்கும் PACKED SALT ஐ ஒருபோதும் வாங்காதே. o கடல் உப்பு விற்கும் கடைகளில் கல்லுப்பு வாங்கி பொடி செய்து கண்ணாடி பாட்டில் அல்லது ஜாடிகளில் வருடம் முழுவதற்கும் தேவையான உப்பை அடைத்து வைத்துக்கொள்ளுங்கள்


Iyer
செப் 21, 2024 08:55

வியாபார இறைச்சி - வியாபார முட்டை - வியாபார டைரி பால் உண்பவர்கள் கொடும் நோய்களுக்கு - புற்று நோய், சக்கரை நோய், இதயவலி - உள்ளாகிறார்கள். மேற்கண்ட மூணு உருப்படிகளை உடனே தடை செய்யனும். இறைச்சி தின்றே ஆகணும் என்று அடம் பிடிப்பவர்கள் வீட்டிலேயே ஆடு கோழி வளர்க்கலாம்