உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போக்குவரத்து துறை - போலீஸ் துறை ‛லடாய்: 3 நாளுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது

போக்குவரத்து துறை - போலீஸ் துறை ‛லடாய்: 3 நாளுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது

சென்னை: போக்குவரத்து துறை - போலீஸ் துறை இடையே கடந்த 3 நாட்களாக நீடித்து வந்த மோதல் தமிழக உள்துறை செயலாளர் அமுதா - போக்குவரத்துத்துறை செயலர் பணீந்திர ரெட்டி இடையே நடந்த ஆலோசனையைத் தொடர்ந்து ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.திருநெல்வேலி - துாத்துக்குடி அரசு பஸ்சில் சீருடையுடன் போலீஸ்காரர் ஆறுமுகபாண்டி பயணித்தார். பணி நிமித்தமாக செல்வதால் கட்டணம் எடுக்க முடியாது என அவர் கூற, 'வாரன்ட் இருந்தால் மட்டுமே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும்' என கண்டக்டர் கூற இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின், ஆறுமுகபாண்டி கட்டணம் செலுத்தி பயணித்தார். இது குறித்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட போக்குவரத்து துறை, 'வாரன்ட் இருந்தால் மட்டுமே கட்டணமின்றி பயணிக்க முடியும்' என அறிவுறுத்துமாறு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தது.இதனால் கடுப்பான போலீஸ் உயர் அதிகாரிகள் சிலர், 'அரசு பஸ்களை தவறான முறையில் இயக்கினால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அபராதம் விதிக்க வேண்டும்' என வாய்மொழியாக உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, 23ம் தேதி முதல் திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போக்குவரத்து விதி மீறிய அரசு பஸ்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இது குறித்த செய்தி தினமும் நாளிதழ்களிலும், டிவிக்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியது.கடந்த 3 நாட்களாக பிரச்னை நீடித்த நிலையில், அரசு நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக இருந்தது. இது பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசுத்துறைகள் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் எங்கு போய் முடியுமோ என கவலை தெரிவித்த அவர்கள் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பியதுடன்? உடனடியாக இதில் தலையிட்டு பிரச்னைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.இதனையடுத்து பிரச்னைக்கு முடிவு காண உள்துறை செயலாளர் அமுதாவை, போக்குவரத்துத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் பிரச்னைக்கு தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பாக அறிவுரை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்டனம்

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: போலீஸ் துறை. போக்குவரத்து துறைக்கு இடையே நடக்கும் பனிப்போரைத் தமிழக அரசு தடுக்க தவறியது. பொது மக்களுடன் நேரடியாக தொடர்புடைய இரு துறைகளில் நடக்கும் பனிப்போரை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை. இதனை சரி செய்ய உத்தரவு பிறப்பித்து இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும். இரு துறை இடையே மோதல் போக்கு நிலவுவதாக வரும் செய்திகள் கவலை தருகிறது. ஒரு அரசின் இரு துறைகள் மோதிக்கொள்ளும் செய்தி இதுவரை வரலாற்றில் யாரும் கேட்டிராதது. இவ்வாறு அந்த அறிக்கையில் இபிஎஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Vasudevan
மே 25, 2024 19:50

மக்கள் வரிபணத்தில் சுகமான வாழ்கை வாழ்கின்ற அரசு ஊழியர்களுக்காக சமரசப்படுத்த பெரிய அதிகாரி. நீ பண்ற தவறை நான் கண்டுக்கமாட்டேன்.. நான்பண்ற தவறை நீ கண்டுக்க. இதற்கு பெயர்தான் அட்ஜஸ்ட்மெண்ட் லஞ்சம் இதை மக்கள் சிந்திக்கமல் இருக்க எங்களுக்கும் இலவசபயணம்.


Michal
மே 25, 2024 17:21

நான் ஓரு நடத்துனர். காவல் துறையின் ஒத்துழைப்பு இல்லாமல் எங்களால் பணி செய்ய முடியாது .நடத்துனர் தவறு செய்விட்டார்.என்ன தவறு என்றால் மீடியாவுக்கு வீடியோவை கொடுத்ததே. போலிஸ் பழிவாங்கவில்லை இவ்வளவு குறை உங்களிடம் உள்ளதே அதை நாங்கள் கண்டும்காணாது போனால் இப்படி செய்து விட்டார்களே என்று மீடியாவுக்கு அவர்களும் தெரிவுபடுத்தினார்கள்


Jysenn
மே 25, 2024 15:56

OC will prevail.


Kasimani Baskaran
மே 25, 2024 15:44

இனி விதி மீறி பேருந்துகளை இயக்கலாம். எந்தக்கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது.


Michal
மே 25, 2024 17:38

மத்திய அரசு கொண்டுவந்த மோட்டார் வாகன சட்டம் இருக்கிறது.தேர்தல் ரிசல்ட் வந்ததும் போலிஸ் மட்டுமே கொம்பன்


Muthu Kumaran
மே 25, 2024 14:51

போக்குவரத்து துறை அமைச்சர் எங்கு சென்று விட்டார். ?


Ram pollachi
மே 25, 2024 14:01

பெரும்பாலும் எனது பயணம் அரசு பேருந்தில் தான் நல்ல தன்மையான நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களை பார்த்திருக்கிறேன். பிரச்சினைகளை லாவகமாக தீர்ப்பார்கள் முதலில் டிக்கெட்டை கிழித்து கொடுத்துவிட்டு நகர்ந்து விடுவார்கள் பிறகு வரும்போது நாம் காசு கொடுத்தால் வாங்குவார்கள் யாரும் ஏமாற்ற மாட்டார்கள்... காவலருக்கு சீட்டை கொடுத்துவிட்டு பணம் தரவில்லை என்றால் பெரிய இழப்பு நடத்துநருக்கு வராது அதை வேறு வழியில்லாமல் சமாளித்து விடுவார்கள் ஆனால் இங்கே விடாப்பிடியாக சீருடை காவலருடன் சண்டை போட்டது வேண்டாத வேலை... மேலும் பேருந்தில் வழிதட வரைபடம், நேரம், கட்டண விபரம் உள்ளிட்ட பர்மிட் வண்டியில் இருக்காது. சிறப்பு பேருந்து என்று சொல்லி அடிக்கும் கட்டண கொள்ளை தாங்க முடியவில்லை... காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து பூண்டி (ஈஷா) செல்ல ரூ50/- ரூ.60/- என்று வாங்குகிறார்கள் கேட்க நாதியில்லை... பெண்களுக்கு இலவச பயணம் ஆனால் அவர்கள் கொண்டு வரும் சிறு உடைமைகளுக்கு கட்டணம் உண்டு. டிக்கெட் பரிசோதகர் மற்றும் நேர கண்காணிப்பாளர்கள் வேலை செய்கிறார்களா? மொத்தத்தில் கலெக்ஷன், நேரம் முக்கியம் இல்லை எரிபொருள் சிக்கனம் மட்டுமே பிரதானம்... லஞ்சம் கொடுத்தால் வேலை உண்டு சம்பளம், ஓய்வு ஊதிய பலன் தர நிதி இல்லை. இதை நிர்வாகம் செய்ய ஐ ஏ எஸ் அதிகாரி தேவையா?


ayen
மே 25, 2024 13:29

இதில் பொது மக்களும் சமுக ஆர்வலர்களும் சந்துல பட்டிருக்க வேண்டும், காரணம் இரண்டு அரசு துறைகளும் சட்டத்தை மதிப்பதில்லை இதனால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இவர்களை மாத விட்டிருந்தால் இரண்டு துறைகளும் செய்யும் தவற்றை இவர்களே காட்டிக் கொடுத்து திருந்தி இருப்பார்கள். அவ்வாறு செய்யாமல் பத்திரிக்கைகளில் இதை பெரிசு படுத்தி நல்லது நடக்காமல் தவிர்த்து விட்டார்களே.


UTHAMAN
மே 25, 2024 13:29

காவலரை டிக்கட் எடுக்கச் சொன்ன பேருந்து நடத்துநரின் முழு ஜாதகத்தையும் இந்நேரம் போலீஸ் ஆராய்ந்திருக்கும். நடத்துநர் ஏற்கனவே திமுககாரனாக இருந்தால் பயமில்லை. இல்லையெனில் உடனே திமுக மாவட்ட செயலரை சந்தித்து உடனே திமுக உறப்பினராகிடனும். இல்லை எனில் மாவுக்கட்டு நிச்சயம். காவல்துறை சர்வ வல்லமை படைத்த ஒரே குடும்பம்.


ராஜா
மே 25, 2024 13:29

இனிமே டிக்கெட் எடுப்பாங்களா ?


Lion Drsekar
மே 25, 2024 13:21

போக்குவரத்துத்துறைக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது , எப்போதும் போல் எப்படி வேண்டுமானாலும் செல்லலாம் . வாழ்த்துக்கள். வந்தே மாதரம்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை