உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சசிகலாவுக்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கு: விரைந்து முடிக்க உத்தரவு

சசிகலாவுக்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கு: விரைந்து முடிக்க உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சசிகலாவுக்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க, எழும்பூர் நீதிமன்றத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜெ.ஜெ., டிவிக்கு, வெளிநாட்டில் இருந்து, உபகரணங்கள் வாங்கியதில் மோசடி செய்ததாக, அன்னிய செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அமலாக்கத்துறை தொடர்ந்த இந்த வழக்கில், முதலாவதாக ஜெ.ஜெ., டிவி நிறுவனம்; இரண்டாவதாக, 'டிவி' நிர்வாக இயக்குநர் பாஸ்கரன்; மூன்றாவதாக, 'டிவி' நிறுவன தலைவர் மற்றும் இயக்குநர் சசிகலா என குறிப்பிடப்பட்டிருந்தனர். இந்த வழக்கு, எழும்பூர் பொருளாதார குற்ற வியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கு விசாரணை பட்டியலில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் வரிசையில், தனது பெயரை முதலாவதாக சேர்த்திருப்பதை எதிர்த்தும், சில கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படி, எழும்பூர் நீதிமன்றம் அனுப்பியதை எதிர்த்தும், உயர் நீதிமன்றத்தில், சசிகலா மனுக்கள் தாக்கல் செய்தார். இம்மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் ரஜினிஷ் பதியில் ஆஜராகி, ''அன்னிய செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தின்படி, வழக்கு விசாரணை பட்டியலில் உள்ள தவறால், விசாரணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த தவறை, விசாரணை நீதிமன்றமே சரிசெய்ய முடியும்,'' என்றார்.சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், எழும்பூர் நீதிமன்றத்தில் உள்ள, இந்த வழக்கின் விசாரணை பட்டியலை மாற்றும்படி கோரினார். இருதரப்பு வாதங்களுக்கு பின், சசிகலாவின் மனுக்களை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள இந்த வழக்கை விரைந்து விசாரிக்கவும், தேவையின்றி தள்ளி வைக்க கோராமல், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

V RAMASWAMY
டிச 13, 2024 21:31

எதெதற்கெல்லாமோ கால வரையறை இருக்கும்பொழுது வழக்குகளை சீக்கிரம் முடிப்பதற்கு ஏன் காலவரையறை நிர்ணயம் செய்யவில்லை? ஒரு வழக்கு இளைஞனாக இருக்கும்பொழுது ஆரம்பித்தால், அது முடிவதற்குள் கொள்ளு தாத்தா/பாட்டி ஆகிவிடுவார்கள் அல்லது மூப்பு காரணமாக இறந்தும் விடலாம். தவிர, பல வழக்குகளில் ஏன் உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதி மன்றத்துக்கும் நீதி வழங்குவதில் வேறுபாடு ஏற்படுகிறது? ஒரே வழக்குக்கு ஒவ்வொரு கோர்ட்டுக்கும் வேவ்வேறு மாதிரி நீதியா?


அப்பாவி
டிச 13, 2024 15:44

அடப் போங்கடா... அணிலையே ஒண்ணும் அசைக்க முடியலை. சின்பம்மாவை அசக்கப் பாக்குறாங்களாம்.


ngopalsami
டிச 13, 2024 13:19

மத்தியில் பிஜேபி இருக்கும்வரை குற்றவாளிகளின் குற்றங்கள் அடுக்கடுக்காக வெளியே வரும், ஆனால் ஒன்றும் நடக்காது. எந்த தண்டனையும் கிடைக்காது. ஒவ்வொருவருக்கும் ஒரு பெரிய தலைகள் மத்தியில் உள்ளனர். அவர்கள் காப்பாற்றிவிடுவார்கள். இந்த செய்திகள் எல்லாம் வெடிக்காத வெட்டுகள்.சசிக்கு ஒன்றும் கவலையில்லை.


Ramesh Sargam
டிச 13, 2024 12:19

விரைவு .... நமது நீதிமன்றங்களில் அதை எதிர்பார்ப்பது நம் தவறு....


Palanisamy T
டிச 13, 2024 10:47

அரசியல் கட்சிகள் தொடங்குவது சேர்வது என்பெதெல்லாம் நாட்டுச் சேவை மக்கள் பணி என்பதற்காகத்தான். ஆனால் வருகின்றவர்கள் தங்களின் சுய நலத்திற்க்காகவும் குறுகிய காலத்தில் சம்பாதிக்கவும் வருவதை காலங்கள்தான் நமக்கு உணர்த்துகின்றது. இதனால் அரசியவாதிகள் ஆட்சியாளர்கள் குற்றங்கள் செய்கின்றார்கள். வாக்களிக்கின்றவர்களும் வாக்குச் சீட்டின் அருமைத் தெரியாது குறுகிய லாபத்திற்க்காகவும் சொற்ப்ப ஆசைகளுக்காகவும் விலைப் போகின்றார்கள். அதனால் வருகின்ற பின் விளைவுகளுக்கும் அவர்கள் பலியாக வேண்டியுள்ளது. அதன் விளைவுகளைத்தான் இன்றுப் பார்க்கின்றோம். பாதிக்கப்படுவது அவர்கள் மட்டுமில்லை. வரப்போகின்ற நாளைய தலைமுறையினர்களும் என்பதையும் என்பதை மறந்து விடுகின்றார்கள். இனிமேலாவது விழித்துக் கொண்டால் நல்லது. வாழ்க தமிழ் வாழ்க மக்கள்.


Barakat Ali
டிச 13, 2024 09:16

எங்க துக்ளக் மன்னர் குடும்பத்தை மட்டும் எந்த சட்டமும் தொட்டுக்கூட பார்க்க முடியாது...


வைகுண்டேஸ்வரன்
டிச 13, 2024 09:11

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும்? அல்லது தூங்கும் அமலாக்கத் துறையின் லட்சணம், திறமை, தகுதி இவ்ளோ தான். தேர்தல் சமயங்களில், நாலு cab எடுத்து கிட்டு சொல்ற வீட்டுக்கெல்லாம் போயி பழைய பேப்பர்லாம் எடுத்து கிட்டு வருவார்கள்.


Kasimani Baskaran
டிச 13, 2024 06:25

உச்ச நீதிமன்றம் இது போன்ற கட்டளைகளை பிறப்பிக்க முடியும் - ஆனால் உயர் நீதிமன்றமே இது போல கட்டளையிடுவதை இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.


முக்கிய வீடியோ