உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசை விமர்சித்த வெளிநாட்டு மாணவர்கள்... வெளியேறுங்கள்!:விசாக்களை ரத்து செய்து டிரம்ப் அரசு அதிரடி; பதிவுக்கு லைக் போட்டவர்களுக்கும் சிக்கல்

அரசை விமர்சித்த வெளிநாட்டு மாணவர்கள்... வெளியேறுங்கள்!:விசாக்களை ரத்து செய்து டிரம்ப் அரசு அதிரடி; பதிவுக்கு லைக் போட்டவர்களுக்கும் சிக்கல்

வாஷிங்டன்: அரசின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்ட அல்லது கருத்து வெளியிட்ட வெளிநாட்டு மாணவர்களின் விசாவை, அமெரிக்க அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. அவர்கள் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. தாமாகவே வெளியேற தவறினால், கைது உட்பட கடுமையான நடவடிக்கைகளை மாணவர்கள் சந்திக்க நேரும் என, ஒவ்வொரு மாணவருக்கும், இ- - மெயில் வாயிலாக அமெரிக்க அரசு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது, உலகம் முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களிலும், கல்லுாரிகளிலும், வெளிநாடுகளைச் சேர்ந்த, 11 லட்சம் மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இதில், 3.31 லட்சம் பேர் இந்தியர்கள்.

சகஜம்

அமெரிக்க கல்வி நிறுவன வளாகங்களில், அமெரிக்க அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடப்பது சகஜமான காட்சி. குறிப்பாக வெளிநாடுகள் தொடர்பான அமெரிக்க அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடப்பதும், அமெரிக்க அதிபரை கேலி செய்து பேனர்கள் ஏந்தி கோஷமிடுவதும் வாடிக்கை. சில நேரங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் கலவரத்தில் முடிவதும் உண்டு.கருத்து சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது என்ற வகையில், இதுவரை ஆட்சியில் இருந்த அதிபர்கள், இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், குடியரசு கட்சியைச் சேர்ந்த பலருக்கு இது பிடிக்கவில்லை. படிக்க வந்த இடத்தில், எங்கள் அரசுக்கு எதிராக போராடுவது என்ன நியாயம் என்று கேட்கின்றனர். அதிபர் டிரம்ப் அவர்களில் முன்னோடி. டிரம்ப் அரசில், வெளியுறவு அமைச்சராக இருக்கும் மார்கோ ரூபியோ, அதிபரின் மனநிலையை தெளிவாக பிரதிபலிக்கும் வகையில், சில நாட்களுக்கு முன் ஒரு பேட்டி அளித்தார். அதில், 'அமெரிக்காவில் படித்து பட்டம் வாங்க விரும்புவதாக சொல்லி அனுமதி கேட்கிறீர்கள். நாங்களும் மாணவர்களுக்கான விசா தருகிறோம்.'ஆனால், இங்கே வந்த பின் படிப்போடு நில்லாமல், உங்கள் நாட்டிலோ, வேறு ஏதோ ஒரு நாட்டிலோ நடக்கும் பிரச்னைக்காக ஆர்ப்பாட்டம் நடத்தி கலவரம் உண்டாக்கி, கல்லுாரியின் சூழலை கெடுக்கிறீர்கள்.சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துகிறீர்கள். விசா கொடுத்த அரசுக்கு எதிராக செயல்பட உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இதுவரை பொறுத்தது போதும் என்ற முடிவுக்கு நாங்கள் வந்துவிட்டோம்' என்றார் அமைச்சர் ரூபியோ.புது செயலிஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், உரை நிகழ்த்தியவர்கள், கோஷம் போட்டு போலீஸ் மீது கல் வீசியவர்கள் என்று வீடியோ பதிவுகளை பார்த்து பார்த்து, மாணவர்களை அடையாளம் கண்டு வெளியேறச் சொன்னது அரசு.இப்போது ஒருபடி மேலே சென்று, சமூக ஊடகத்தில் அமெரிக்க அரசுக்கு எதிராக யாரோ போட்ட பதிவுக்கு 'லைக்' போட்டவர்கள், பதிவை ஷேர் செய்தவர்கள் ஆகியோரையும் கண்டுபிடித்து வெளியேறச் சொல்கிறது. இதற்காக ஒரு செயலியை உருவாக்கி இருக்கிறது. 'கேச் அண்டு ரிவோக்' என்பது அதன் பெயர். கண்டுபிடி, விசாவை ரத்து செய் என்பது உள் அர்த்தம்.பாலஸ்தீனிய பயங்கரவாத அமைப்புகள், ஹமாஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்கள் ஆகியவற்றுக்கு ஆதரவாக மாணவர்கள் குரல் கொடுப்பதை, தேச விரோத செயலாக டிரம்ப் அரசு பார்க்கிறது. இதுபோன்ற இடதுசாரி சிந்தனை கொண்ட மாணவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, விசா கொடுக்காமல் மறுக்குமாறு துாதரகங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. படிப்பு முடங்கும்அடையாளம் காணப்படும் ஒவ்வொரு மாணவன் அல்லது மாணவிக்கும் தனி, 'இ - -மெயில்' அனுப்பப்படுகிறது. இதில், பல இந்திய மாணவர்களும் அடங்குவர்.'தேச விரோத செயல்களுக்காக, உங்கள் மாணவர் விசா ரத்து செய்யப்படுகிறது. உடனடியாக, நீங்களாகவே நாட்டை விட்டு வெளியேற வேண்டும்; இல்லை எனில், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.அமெரிக்க அரசின் இந்த அதிரடி முடிவால், ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்களின் படிப்பு முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 67 )

Sivagiri
ஏப் 06, 2025 08:58

நாட்டாமை = தீர்ப்பை மாற்றாதே - அப்டியே மெயின்டெய்ன் பண்ணு . . . அதையே இங்கேயும் :.பாலோ பண்றங்க . . . அது மட்டும் இல்ல , வெளிநாட்ல இருந்து , நாட்டை பற்றியும் அரசையம் விமர்சித்தாலும். உள்ளே விடக்கூடாது . . அப்டியே போயிடுன்னு சட்டம் , போட்றலாம் , . . . இங்கே கம்யூனிஸ்ட் கம்னாட்டிகள். கன்வெர்ட்டிஸ்டுகள். அர்பன் நக்சல்கள். போலி கணசேர்விஸ்ட்கள் , , , கனடா எபெக்ட் கும்பல் , டூல்கிட் கும்பல் , ஜிஹாதி கும்பல் . . . அப்டி ஏகப்பட்ட கும்பல் , . . .


Chandrasekaran Balasubramaniam
ஏப் 04, 2025 13:44

இந்தியாவில் செய்கிற அயோக்கிய தனத்தை அங்கு செய்தால் சும்மா விடுவார்களா. டிரம்ப் செய்தது தான் சரி. நாட்டை விட்டே கிளப்பனும் அந்த மாதிரி ஆளுகளை.


Ramesh Sargam
ஏப் 01, 2025 12:51

ட்ரம்ப் அதிபராக இருக்கும்வரையில் அமெரிக்காவில், கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், ஏன் சொல்லப்போனால் நாட்டு சுதந்திரத்திற்கே ஆபத்துதான்.


S.V.Srinivasan
ஏப் 01, 2025 11:35

போற போக்க பார்த்தா பெரியண்ணா அமெரிக்காவின் சர்வாதிகாரி ஆய்டுவார் போல இருக்கே. ஐயோடா.


Natarajan Ramanathan
ஏப் 01, 2025 11:26

மிகவும் சிறந்த வரவேற்கவேண்டிய நடவடிக்கை. அதேபோல படிக்க வந்த இடத்தில வெள்ளிக்கிழமை மாலை குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த அயோக்கியர்கள் கூடி அமெரிக்க அரசுக்கு எதிராக கூவுவதையும் தடை செய்து, அப்படி செய்தால் விசா ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கையும் செய்யவேண்டும்.


subramanian
மார் 31, 2025 21:07

இது தவறான உதாரணமாக இருக்க கூடாது. டிரம்ப் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த ஒரு முறை எச்சரித்து விட்டு விட வேண்டும். அடுத்த முறை இதை செய்தால் விசா ரத்து செய்யலாம். மாணவர்கள் கல்வியில் சிறிது விட்டு கொடுக்கலாம்....


SP
மார் 31, 2025 19:54

வரவேற்கத்தக்கது. இந்தியாவிலும் இதை அமல்படுத்த வேண்டும்.


skanda kumar
மார் 31, 2025 19:05

அமெரிக்காவைவிட நம்ம நாட்டுல சுதந்திரம் அதிகம். Pechurimai


rama adhavan
மார் 31, 2025 18:24

படித்தோமா, வேலை பார்த்தோமா, க்ரீன் கார்டு வாங்கினோமா, குடிமகன் ஆனோமா என்பதை விட்டுவிட்டு உனக்கு ஏன் வேண்டாத வேலை. போன நாட்டின் பிரட்சினை உனக்கு எதற்கு? இப்போது அமெரிக்கா விசா ரத்து. வேறு நாடு விசா தராது. சொந்த நாட்டிலும் வேலைக்கு இன்டெர்வியூவில் நூறு கேள்விகள் கேட்பார்கள். எனவே எதிர்காலமே போச்சு. குடும்பம் போச்சு. இப்போது புலம்பி என்ன பயன்? கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.


பெரிய ராசு
ஏப் 01, 2025 14:55

சென்றவிடம் எல்லாம் அழிவு ...


Hani
மார் 31, 2025 18:11

வரவேற்க தக்க முடிவு. இதை எல்லா நாட்டிலும் அமல்படுத்த வேண்டும். பல பேர் வெளிநாட்டில் இருப்பதால் தங்களை எதுவும் செய்ய முடியாது என்ற ஆணவத்தில் உள்ளனர். Deport அவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை