உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊட்டி, கொடைக்கானலில் வாகனங்களுக்கு சட்டப்பூர்வ அனுமதியின்றி பசுமை வரி வசூல்: வனத்துறை அதிகாரிகள் தகவல்

ஊட்டி, கொடைக்கானலில் வாகனங்களுக்கு சட்டப்பூர்வ அனுமதியின்றி பசுமை வரி வசூல்: வனத்துறை அதிகாரிகள் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்வோரின் வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்கப்படுகிறது. இதற்கு, எவ்வித சட்டப்பூர்வ அனுமதியும் இல்லை' என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர். தமிழகத்தில், நீலகிரி மாவட்டம் ஊட்டி, திண்டுக் கல் மாவட்டம் கொடைக்கானல், சேலம் மாவட்டம் ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு, விடுமுறை காலங்களில், அதிகமான மக்கள் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். பெரும்பாலானோர் தங்களின் சொந்த கார், வாடகை கார், வேன் போன்றவற்றில் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் செல்வதால், அப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 'இ - பாஸ்' கட்டாயம் இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளுக்கு, வெளியூர் வாகனங்கள் செல்ல, 'இ - பாஸ்' கட்டாயமாக்க ப்பட்டு உள்ளது. இம்முறை தற்போது அமலில் உள்ளது. அதனால், இப்பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களிடம், நுழைவு வாயிலில் தலா, 30 ரூபாய் வீதம் பசுமை வரி வசூலிக்கப்படுகிறது. வெளியூர் வாகனங்களால் அங்கு ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை சரி செய்ய, இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று மேலோட்டமாக கூறப்படுகிறது. பொதுவாக, சமவெளி பகுதிகளில், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு வரும் வெளியூர் வாகனங்களிடம், உள்ளாட்சிகளின் தீர்மானம் அடிப்படையில், நுழைவு வரி வசூலிக்கப்படும். இது, அந்த ஊரின் வளர்ச்சி பணிக்கு பயன்படுத்தப்படும். ஆனால், ஊட்டி, கொடைக்கானல் மற்றும் ஏற்காட்டில், பசுமை வரி எதன் அடிப்படையில் வசூலிக்கப்படுகிறது என்பது புதிராக உள்ளது. இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஊட்டி போன்ற இடங்களுக்கு, வெளியூர் வாகனங்கள் அதிகமாக வரும் நிலையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், சூழலியல் பாதுகாப்பு பணிகளுக்கு, கூடுதலாக செலவு செய்ய வேண்டியுள்ளது. இதை கருத்தில் வைத்து, 2020 டிசம்பர், 1 முதல் வெளியூர் வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்கப்பட் டது. மாவட்ட கலெக்டரின் உத்தரவின் அடிப்படையில் மட்டுமே, இந்த வரி வசூலிக்கப்படுகிறது. அரசாணை இல்லை பொதுவாக இது போன்ற வரி விதிக்கப்படும் நிலையில், அதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இருக்க வேண்டும். சட்டத்திருத்தம் செய்து இருக்க வேண்டும் அல்லது அரசாணை பிறப்பித்து இருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லாமல், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் பசுமை வரி விதிக்கப்படுகிறது. சட்டப்பூர்வ அங்கீகாரத்தை பெற, மாவட்ட நிர்வாகம் ஆர்வம் காட்டாமல் உள்ளது. பசுமை வரி வாயிலாக கிடைக்கும் நிதி, சுற்றுச்சூழல் திட்டங்கள் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு பணிகளுக்கு தரப்படும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், ஆண்டுக்கு, 7 கோடி ரூபாய் அளவுக்கு பசுமை வரி வசூலாகியும், பிற துறைகளுக்கு எந்த நிதியும் கிடைக்கவில்லை. இந்த விஷயத்தில், தமிழக அரசு தலையிட்டு, உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ