மேலும் செய்திகள்
பா.ம.க., சட்டசபை குழு தலைவர் மணி நீக்கம்?
26-Sep-2025
சென்னை:முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நேற்று, சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், மீண்டும் கட்சியில் இணைவதற்கு காய் நகர்த்தி வந்தார். அவருக்கு ஆதரவாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குரல் எழுப்பினார். இருவரின் முயற்சிகளும் பலனளிக்காததால், பா.ஜ., மேலிட உத்தரவை தொடர்ந்து அடக்கி வாசித்து வருகின்றனர். சட்டசபை கூட்டம் நேற்று துவங்கிய நிலையில், பன்னீர்செல்வம் வரவில்லை. அரவக்குறிச்சி தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜியும் வரவில்லை. உடல்நல குறைவால் அவதிப்பட்டு வரும் முன்னாள் சபாநாயகர் தனபால் உட்பட சில எம்.எல்.ஏ.,க்களும் வரவில்லை.
26-Sep-2025