உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மறைந்த காங். மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல் தகனம்

மறைந்த காங். மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல் தகனம்

சென்னை: மறைந்த காங். மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு, வடபழனி மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.காங்கிரஸ் மூத்த தலைவரும், பா.ஜ.,வைச் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன், 93, சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக அவர் சிகிச்சையில் இருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nk05lx1t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நள்ளிரவு 12.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் ஒருமுறை எம்.பி.,யாகவும், நான்கு முறை எம்.எல்.ஏ.,வாகவும் இருந்தவர்.காங்கிரசில் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர், 1980ல் காந்தி காமராஜ் என்ற கட்சியை துவங்கினார். பின் அதை காங்கிரசுடன் இணைத்தார். தமிழக அரசு கடந்த ஆண்டு குமரி அனந்தனுக்கு 'தகைசால் தமிழர்' விருது வழங்கியது.சென்னை சாலி கிராமத்தில் உள்ள தமிழிசை இல்லத்தில் குமரி அனந்தன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், தமிழிஞர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

உடல் தகனம்

மறைந்த குமரி அனந்தனுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.அதன்படி குமரி அனந்தன் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவரது உடல் வடபழனி மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

பிரதமர் மோடி இரங்கல்

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சமூகத்திற்கும், தமிழகத்திற்கும் குமரி அனந்தன் ஆற்றிய பணிகள் நினைவு கூரப்படும். அவர் தமிழ்மொழியை பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர். குமரி அனந்தன் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். தொடர்ந்து, இன்று மாலை 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வடபழனி ஏ.வி.எம்., மின்மயானத்தில் குமரி ஆனந்தனின் உடல் தகனம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Matt P
ஏப் 09, 2025 21:51

கம்பீரமான குரல்,இலக்கியத்தரமான பேச்சு நடையால் குமரிக்கு பெருமை சேர்த்தவர். .தமிழுக்கும் தான். .தான் தொடங்கிய கட்சிக்கு காந்தி காமராஜ் என்று பெயர் வைத்து காந்தியும் காமராஜரும் நாட்டுக்கு கிடைத்த சொத்து என்பதை பறை சாற்றினார். இந்தியிலும் இங்கிலீஷும் இருந்த money ஆர்டர் தாளில் தமிழையும் சேர்க்க செய்தார். நாட்டுபற்றோடு,போராடிய வாஞ்சியின் நினைவாக ரயில் நிலையத்துக்கு வாஞ்சி மணியாச்சி என்று பெயரிட செய்து தன்னுடைய நாட்டுப்பற்றை நிரூபித்தார். வழிந்தோடும் சாராயத்துக்கு எதிராக போராடி தமிழ்நாட்டு மக்களின் நலனிலும் அக்கறை காட்டினார்.


sankaranarayanan
ஏப் 09, 2025 18:58

காங்கிரசு கட்சி பொறுப்பாளர்கள் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தொகை ஏனைய கட்சி நிர்வாகிகள் ஒருவர்கூட வந்ததாக தெரியவில்லையே


எஸ் எஸ்
ஏப் 09, 2025 16:37

சுதந்திர போராட்ட தியாகிகளை போற்றியவர். வாஞ்சி மணியாச்சி என்று மணியாச்சி ரயில் நிலையத்தின் பெயர் மாற காரணமாக இருந்தவர். கண்ணியமான அரசியல்வாதி. ஓம் சாந்தி


மனிதன்
ஏப் 09, 2025 15:16

பாவம், தமிழிசையின் போக்கை நினைத்தே மனுஷன் நொந்து நூடுல்சாகியிருந்தார்., இன்று.... ஆழ்ந்த இரங்கல்...


கல்யாணராமன் மறைமலை நகர்
ஏப் 09, 2025 19:05

இந்த விடியா ஆட்சியின் அவலத்தை நினைத்து நொந்து போய் இருந்தவருக்கு இந்த விடியா அரசு தகைசால் தமிழர் என்ற விருதை வழங்கியது. இந்த அரசு விருது தரும் அளவுக்கு நம் தரம் தாழ்ந்து விட்டதா என்ற அதிர்ச்சியில் விழுந்தவர் இறைவனடி சேர்ந்துவிட்டார்.


Matt P
ஏப் 09, 2025 21:57

மாநிலத்தில் கட்சி தலைவராகி இன்னொரு மாநிலத்தில் ஆளுநராகி சிறந்த பேச்சாளாரானதுமே குமரி ஆனந்தனுக்கு கிடைத்த பெருமை தான்.


saravanan
ஏப் 09, 2025 14:13

பெரியவர்கள் ஊக்கு வித்தால் இளைஞர்கள் ஏன் பின்வாங்குகிறார்கள் போன்ற சிலேடை நயங்கள் அவருடைய சொல்லாற்றலின் ஆழத்தை என்றென்றும் பறைசாற்றும் மறைந்த குமரியார் தரமான இலக்கியவாதி தாராளமான சிந்தனையாளர் நற்றமிழ் பேச்சாளர் மக்கள் சேவையில் நழுவாதவர் அனைத்துக்கும் மேலாக கொண்ட கொள்கையிலிருந்து வழுவாதவர் அன்னாரின் ஆன்மா அமைதியடைய ஆண்டவன் அருள் புரிவானாக


Nallavan
ஏப் 09, 2025 13:56

உயிர் உள்ளவரை தான் சார்ந்திருந்த காங்கரஸ் கட்சியில் இருந்து கட்சி பணியாற்றிய ஐயா குமாரி ஆனந்தன் அவர்களின் அத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திப்போம், அவரை பிரிந்து வாடும் தமிழிசை, மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்


ponssasi
ஏப் 09, 2025 12:41

மிக சிறந்த இலக்கிய ஆளுமை, தமிழ் பற்றாளர், நேர்மையாளர், நேர்மையானவர்கள் காங்கிரஸ் தலைவராக இருக்கும் வரை குமரியார் நல்ல செல்வாக்குடன் இருந்தார் பெரிதும் மதிக்கப்பட்டார். அதன் பின் வந்தவர்களுடன் குமரிஆனந்தன் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆழ்த்த இரங்கல்


Thetamilan
ஏப் 09, 2025 12:28

நாட்டை காத்தவர்களை வளர்த்தவர்களை போற்றும் அரசு . தூற்றுவார் தூற்றினாலும் போற்றிக்கொண்டே இருக்கும் அரசு திமுக அரசு . நாட்டை விற்றவர்களை கூண்டிலேற்றும் நாடுகடத்தும் காலம் மிக அருகில் நெருங்கிவிட்டது


நசி
ஏப் 09, 2025 12:11

தமிழ் சொல்லியே நல்ல பலன் அடைந்தவர் அரசு செலவில் இலவச வீடு தகைசால் விருது பாவம் பலர்அடுத்த வேளைக்கு இல்லாமல் உள்ளனர்


ஆரூர் ரங்
ஏப் 09, 2025 11:13

ஊழலில் ஊறிய மட்டை அரசிடம் விருது பெற்றுக் கொண்டது இவர் செய்த இமாலயத் தவறு. இந்த அரசின் மரியாதையை தமிழிசை மறுத்துவிடலாம். முக்கியமாக ஊழல் பெருச்சாளியை கலைஞர் எனக் குறிப்பிடுவதை பிஜெபி அபிமானிகள் எவரும் ரசிக்கவில்லை.


Indian
ஏப் 09, 2025 18:47

ஊழல் எங்க இல்ல , உன் கட்சி என்ன ரொம்ப யோக்கியமா ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை