உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் முன்னாள் அமைச்சரின் ரூ.பல கோடி கொள்ளை விவகாரம்; போலீசார் விசாரணை

மதுரையில் முன்னாள் அமைச்சரின் ரூ.பல கோடி கொள்ளை விவகாரம்; போலீசார் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஒருவர் பினாமி மூலம் பதுக்கி வைத்திருந்த ரூ.பல கோடி கொள்ளை அடிக்கப்பட்டது. ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தலையீட்டால், இவ்விவகாரம் குறித்து போலீசார் ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.மதுரை விளாங்குடியில் உள்ள ஒரு அபார்ட்மென்ட் வீட்டில் ஜூன் 21ல் பணம் கொள்ளை போனது. அந்த பணம் முன்னாள் அமைச்சருடையது என்பதால் அவரே நேரடியாக வந்து விசாரித்தார். சட்டசபை தேர்தலுக்காக பதுக்கி வைத்திருந்த அந்த பணம் கொள்ளை போனது குறித்து கட்சி தலைமைக்கு தெரிவித்தால் 'கட்சிக்கு ஏன் நிதி தரவில்லை' என கேள்வி கேட்கக்கூடும் என்பதால் செய்வதறியாது தவித்தார். 'சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல்' என உணர்ந்தவர், ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகரை தொடர்பு கொண்டு நடந்த விஷயத்தை கூறினார். பிரச்னையின் வீரியத்தை புரிந்துக்கொண்ட அந்த பிரமுகர், 'அடாவடி'க்கு பெயர் போன இரு நிர்வாகிகளை தொடர்பு கொண்டு வேண்டிய உதவிகளை செய்யுமாறு உத்தரவிட்டார்.அதேசமயம் போலீஸ் உயர் அதிகாரிக்கும் 'இவ்விஷயம் குறித்து ரகசியமாக விசாரித்து நடவடிக்கை எடுங்கள்' என உத்தரவிடப்பட்டது.இதைதொடர்ந்து பினாமி நபரிடம் போலீசார் விசாரித்தபோது கொள்ளை போனது கணக்கில் காட்ட முடியாத பல கோடி ரூபாய் எனத் தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்யாமல் விசாரித்தால், நாளை தங்களுக்கு பிரச்னையாகிவிடும் எனக்கருதிய போலீசார், பினாமி நபர் தொழில் செய்யும் வரவு செலவுகளை கணக்கிட்டு ரூ.2.80 கோடி கொள்ளை போனதாக வழக்குப்பதிவு செய்தனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முன்னாள் அமைச்சரின் உறவினருக்கு பழக்கமான ஆரப்பாளையம் நபருக்கு தொடர்பு இருக்கலாம் என தெரியவந்தது. கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் அந்நபர் மீது 2 கொலை வழக்குகள் உள்ளன. கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் சில வழக்கறிஞர்களின் வழிகாட்டுதலும் உண்டு என்கின்றனர் போலீசார்.அவர்கள் கூறியதாவது: முன்னாள் அமைச்சர், தனது குடும்பத்தினர் பெயரில் சில தொழில்களை செய்து வருகிறார். அனைத்துக்கும் முறையாக வருமான வரி செலுத்துவதில்லை. கட்சி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் கிடைக்கும் வருமானத்தை பினாமி பெயர்களில் முதலீடு செய்து பணத்தை பாதுகாத்து வந்துள்ளார். அதில் ஒன்றுதான் விளாங்குடி அபார்ட்மென்ட் வீட்டில் கொள்ளை போனது. இது திட்டமிட்டே நடந்துள்ளது. கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகள் கிடைத்துள்ளன. அவரது கட்சியினர் ரூ.150 கோடி, ரூ.30 கோடி கொள்ளை போனதாக வேண்டுமென்றே தகவல் கசியவிட்டனர். ஆனால் ரூ.10 கோடி கொள்ளை போயிருக்க வாய்ப்புள்ளது. கொள்ளையில் தொடர்புடையதாக சந்தேகிக்கும் சிலரிடம் விசாரித்து வருகிறோம். இவ்வாறு கூறினர்.நமது நிருபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

S Srinivasan
ஜூன் 25, 2025 12:58

இரண்டு கழகம் திருட்டு கோமாளிகள் தமிழ் நாடு மக்கள் ...வேடிக்கை பார்க்க வேண்டும்


உண்மை கசக்கும்
ஜூன் 25, 2025 11:52

எதற்கு பா ஜ க, இந்த அண்ணா திருடர்களுடன் கூட்டணி வைக்க கெஞ்சுகிறது. இரண்டு திருடர் கும்பல், வி சி, ம தி மு க, பா ம க, நா த.. எல்லோரும் திருட்டு பசங்க. நம் தமிழ்நாடு சாபக்கேடு.


Perumal Pillai
ஜூன் 25, 2025 11:32

ஒரே குட்டையில் ஊறிய திருட்டு மட்டைகள். செல்லரித்த ராஜாக்கள் .


Rengaraj
ஜூன் 25, 2025 10:22

திமுகவும் அதிமுகவும் ஒரே அணிதான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகிவிட்டது , அவர்கள் திரைமறைவு கூட்டணி வெட்ட வெளிச்சமாகிறது என்பதை இந்த கொள்ளையின் மூலம் பொது மக்கள், வாக்காளர்கள் , அரசியல் பார்வையாளர்கள் மீண்டும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு இரண்டு கட்சிகளிலும் பதவி சுகத்தை அனுபவித்து கொண்டிருந்த அனைத்து உயர் மட்ட அதிகாரிகளும் உடந்தை என்பதை இனிமேலும் சொல்லவேண்டுமா? திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் அதிமுக அமைச்சர்களின் ஊழல்களை பற்றி பேசி வோட்டுக் கேட்டனர். மக்களும் திமுகவை நம்பி வோட்டுப்போட்டனர். ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒரு வழக்கு கூட யார்மேலும் பதியப்படவில்லை. அப்படியென்றால் அண்ணாதிமுக மந்திரிகள் எல்லோரும் உத்தமர்களா ? யாரும் ஊழல் செய்யவில்லையா ? அல்லது திமுக பொய் சொல்லி வோட்டுக்கேட்டதா ? அல்லது இரண்டு கட்சிகளும் கள்ளக்கூட்டணி வைத்துக்கொண்டு பங்காளிக்கட்சிகள் என்று சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றுகின்றனவா ? கொள்ளையடித்தால் நாம் இருவர் மட்டுமே அடிக்கவேண்டும் , மூன்றாவதாக ஒருவர் வந்துவிடக்கூடாது என்று சொல்லிவைத்துக்கொண்டு மக்களை ஒன்றும் தெரியாத ஏமாளிகளாக ஆக்குகின்றனவா ? ஜெ மறைவிற்குப்பின்னால் அதிமுக திமுக ஒன்றாக இணைந்துவிட்டதை விவரம் அறிந்தோர் புரிந்துகொள்வார்கள். இதற்கு அரசாங்கத்தின் கடந்த எட்டு ஆண்டு டெண்டர் விவரங்களை அலசி ஆராய்ந்தால் அனைவருக்கும் புரியும்.


V Venkatachalam
ஜூன் 25, 2025 10:05

அந்த பினாமி பணத்தை கரீட்டா கண்டுபிடிச்சி கொள்ளையடித்தவன் திருட்டு தீய முக காரனுங்களாத்தான் இருப்பானுங்க. பாம்பின் கால் பாம்பறியும். இந்த ரெண்டு பயலுவளயும் சந்தியில் நிக்க வச்சு அடிக்கணும்.


GV.kumar Singapore
ஜூன் 25, 2025 09:29

ஏனோ இந்த பொம்மை படத்த பார்த்தா காமஹாசன் ஞாபகம் வருகிறது: டார்ச் லைட்.


Palanisamy Sekar
ஜூன் 25, 2025 09:04

ஆனாலும் பாருங்கள் பாஜக கூட்டணியை பற்றி அந்த முன்னாள் அமைச்சர் பலே கைசுத்தக்காரன் போல பேட்டியில் கூறுவார். திராவிடம் ஊழலின் மொத்த உருவம்தான். கொஞ்சம் பொறுத்திருங்கள் நம்ம அண்ணாமலை அவர்கள் இதுபற்றி மிக தெளிவாக கூறுவார். கொஞ்சநஞ்ச பணமா இது. இன்றைய ஆட்சியாளர்களின் கணக்கு விவரங்களை கணக்கிட்டால் இதுவெல்லாம் தூசியை போல சுமால் அமௌன்ட். ஒரு மாநிலமே கொள்ளையடிக்கப்பட்டுவிட்டது. யாருக்கும் கவலையே இல்லை. இன்னும் அவனுக்குத்தான் ஓட்டுப்போடுவேன் என்று பெருமையாக பேசுவார்கள். பலவழக்குகள் உள்ள நபர்கள் ஹாய்யாக உலா வருகின்றார்கள். அவர்கள் மீதான நடவடிக்கையை யார் எடுப்பது? ஒருவேளை அந்நியன் யாரேனும் தோன்றுவார்களா? அசுத்தம் பிடித்த மாநிலம் நம்ம தமிழ்நாடு என்பதில் சந்தேகமே இல்லை.


SIVAKUMAR
ஜூன் 25, 2025 08:21

நீதிபதி வீட்டில் கோடி கணக்கில் பணம் சிக்கியது முன்னாள் அமைச்சர் வீட்டில் கோடி கணக்கில் பணம் கொள்ளை அப்போ ஆளும் கட்சி கொள்ளை அடித்து கணக்கில் வராத பணம் எவ்வளவோ? இதற்கு வக்கீல்கள் உடந்தை ஆக இருப்பார்களே?


சமீபத்திய செய்தி