உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் பட்டாசு வெடித்து வீடு சேதம்; 4 பேர் பலியான சோகம்

சென்னையில் பட்டாசு வெடித்து வீடு சேதம்; 4 பேர் பலியான சோகம்

சென்னை: சென்னை அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி அருகே உள்ள தண்டுரை விவசாயி தெருவில் உள்ள ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடி வெடித்து சிதறியது. இதில், சுனில் பிரகாஷ், யாசின் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். பட்டாசுகள் வெடித்ததில் வீடு முழுவதும் சேதமடைந்தன. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து பட்டாபிராம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் பட்டாசு வெடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

shakti
அக் 24, 2025 15:02

பெயர் ஒன்றே போதுமே, பல்லாயிரம் சொல் வேண்டுமா ???


S.jayaram
அக் 20, 2025 20:22

முதலில் அது யார்வீடு அதில் ஏன் பட்டாசுகள் வைக்கப் பட்டிருந்தன என்று விசாரணையை ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் அந்த ஊர் ஒரு சமுதாயதின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது


சின்ன சுடலை ஈர வெங்காயம் ராமசாமி
அக் 19, 2025 20:19

தீபாவளி பட்டாசு விபத்தாக இருக்க வாய்ப்பில்லை. தீர விசாரிக்க வேண்டும்.


Balaa
அக் 19, 2025 17:26

ஆழ்ந்த அனுதாபங்கள். இறந்த மற்ற இருவரின் பெயர் என்ன. வெளிப்படை விசாரணை தேவை.


Venkatesan Srinivasan
அக் 20, 2025 10:29

வெளங்கிடும் டுமீளகம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை