உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓய்வு பெற்ற நீதிபதியிடம் தகராறு; மத போதகர்கள் நால்வர் சஸ்பெண்ட்

ஓய்வு பெற்ற நீதிபதியிடம் தகராறு; மத போதகர்கள் நால்வர் சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி: ஓய்வு பெற்ற நீதிபதியின் காரை வழிமறித்து தகராறு செய்ததால், நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக, கிறிஸ்துவ மத போதகர்கள் நான்கு பேர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.தென்னிந்திய திருச்சபையின் கீழ் செயல்படும், டயோசீசன் எனப்படும் துாத்துக்குடி- நாசரேத் திருமண்டல நிர்வாகத்தை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி கவனித்து வருகிறார். இந்நிலையில், மே 8ம் தேதி துாத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள டயோசீசன் அலுவலக வளாகத்தில் ஜோதிமணியின் காரை வழிமறித்து மத போதகர்கள் சிலர் தகராறு செய்தனர். பிஷப் செல்லையாவின் காரையும் அவர்கள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில், ஜோதிமணியின் உதவியாளர் கருணாகரன் என்பவர் தாக்கப்பட்டார். துாத்துக்குடி ஏ.எஸ்.பி., மதனிடம் அவர் புகார் மனு அளித்துள்ளார். இந்நிலையில், மத போதகர்கள் நான்கு பேரை சஸ்பெண்ட் செய்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி நேற்று உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:காரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மத போதகர்கள் டேவிட்ராஜ், லிவிங்ஸ்டன், ஹாரிஸ், ராபின் ஜெயபிரகாசம் ஆகியோர் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டது தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ளது. இதனால், அவர்கள் நான்கு பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.அவர்களின் வாழ்வாதார உதவித்தொகை தொடர்பான உத்தரவுகள் உரிய நேரத்தில் பிறப்பிக்கப்படும். அவர்கள் கவனித்து வந்த சர்ச் பணிகளை உதவி மத போதகர்கள் கவனித்து கொள்வர். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Jebamani Mohanraj
மே 11, 2025 23:16

பரிசோதிக்கனும்


c.mohanraj raj
மே 11, 2025 14:13

கிறிஸ்தவம் அல்லாத நாட்டில் அவர்களுக்கு அவ்வளவு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது சிறுபான்மையினர் என்ற போர்வையில் முதலில் அந்த அந்தஸ்தை தூக்க வேண்டும் பிறகு கணக்கு காட்டச் சொல்லி அதை சரிப்படுத்த வேண்டும்


India our pride
மே 11, 2025 12:15

சொத்துக்கள் அதிகமாக உள்ளதால் சண்டை நடக்கிறது. அது தவிர சாதி பூசல் வேற, எந்த சாதி தலைமையை கைப்பற்றுவது உட்பட இந்த சண்டை தாங்க முடியாமல், பாவ மன்னிப்புகாரன் சுய தொழில் சர்ச் ஆரம்பிக்கிறான். வருமானத்திற்கு வருமானம். அது தவிர அந்த விதமான கிளு கிளுப்பு வேற போனஸ். உதாரணமாக போப்பு தேர்தலில், அமெரிக்கா வெள்ளைகாரன் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறான். கறுப்பர்கள் மற்றும் இந்தியர் அதிகம் இருந்து கூட, டிரம்ப் அழுத்தத்தால் அமெரிக்கர் ஒருவர் தேர்ந்து எடுக்கப்படுகிறார்.


kumar
மே 11, 2025 11:49

suspend a? enna da ithu puthu urutta irukku


நிக்கோல்தாம்சன்
மே 11, 2025 11:49

மனிதம் தொலைந்து போன தருணம் .


M S RAGHUNATHAN
மே 11, 2025 11:31

இந்த கிரிமினல் குற்றத்தில் ஈடுபட்ட மத பாதகர்களை ஏன் காவல் துறை கைது செய்யவில்லை. ஆட்சி பிச்சை போட்டவர்கள் என்ற நன்றி விசுவாசமா? அல்லது ஜார்ஜ் பொன்னையாவின் கட்டளையா ?


Kasimani Baskaran
மே 11, 2025 10:36

நீதிமன்றம் செல்லாமல் ஒய்வு பெற்ற நீதிபதி கட்டப்பஞ்சாயத்து செய்ததில் சிக்கல். மத நிறுவனத்தில் அடிதடி.


ஆரூர் ரங்
மே 11, 2025 10:15

ஏராளமான சொத்துக்கள் உள்ளதால் அவற்றுக்காக தென்னிந்திய திருச்சபையின் கிளைகளில் அடிதடி கோர்ட் வழக்குகள் அடிக்கடி நடக்கின்றன. CSI சர்ச்சில் பாவமன்னிப்பு கேட்கும் வழக்கமும் இல்லை போலிருக்கிறது. இயேசு கூறியதற்கும் தற்கால கிறித்தவர்களுக்கும் வெகு தூரம். இதனால்தான் இன்னும் தீவீரமான பெந்தேகோஸ்தே சபைகள் உருவாகின்றன. அன்றாடம் அதன் போதகர்கள் கைது செய்திகள் வரும்போது வேடிக்கையாக வேதனையாக இருக்கிறது.


Sangi Saniyan
மே 11, 2025 11:11

உனக்கு உன் மதத்தை தவிர, அதில் உள்ள ஓட்டைகளை, குற்றம் குறைகளை தவிர அடுத்தவர்கள் மதத்தை பற்றி நன்னா அறிந்து தெரிந்து வைத்துள்ளீர் போல


மீனவ நண்பன்
மே 11, 2025 10:15

ஒயின் கொடுப்பதை நிறுத்தி வெறும் கோதுமை மாவு கஞ்சி கொடுக்கணும் ..


Chess Player
மே 11, 2025 09:36

Conversion is a business


முக்கிய வீடியோ