உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் பெயரில் மோசடி முயற்சி: போலீஸ் எச்சரிக்கை

முதல்வர் பெயரில் மோசடி முயற்சி: போலீஸ் எச்சரிக்கை

சென்னை:'முதல்வர் ஸ்டாலின் பெயரை பயன்படுத்தி, மோசடி முயற்சி நடக்கிறது. போலி விளம்பரங்களை, பொது மக்கள் நம்ப வேண்டாம்' என, மாநில சைபர் குற்றப்பிரிவு தலைமையக கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை:பண்டிகை காலங்களை குறி வைத்து, சைபர் குற்றவாளிகள் ஆன்லைன் வாயிலாக, பண மோசடி செய்ய முயற்சி செய்து வருகின்றனர். சமூக வலைதளம் மற்றும் 'வாட்ஸாப்' செயலிகளுக்கு, சில நிறுவனங்கள் சலுகை அளித்து வருவதாக, 'லிங்க்' அனுப்பி மோசடிக்கு முயற்சித்து வருகின்றனர்.அந்த வகையில், 'புத்தாண்டையொட்டி, முதல்வர் ஸ்டாலின் அனைவருக்கும், 749 ரூபாய்க்கான மூன்று மாத, 'ரீசார்ஜ்' முற்றிலும் இலவசம் என்று அறிவித்துள்ளார். எனவே கீழே உள்ள, 'லிங்கை கிளிக்' செய்யவும், இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே' என, விளம்பரம் செய்து, அதற்கான லிங்க் அனுப்பி, பண மோசடி செய்ய முயற்சி செய்து வருகின்றனர். இதுபோன்ற விளம்பரங்கள், மொபைல் போனுக்கு குறுஞ்செய்தியாக அல்லது வாட்ஸாப்பிற்கு தகவலாக வந்தால், அதில் உள்ள, லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். முதல்வர் மற்றும் தனி நபர்கள், நிறுவனங்கள் சலுகை அறிவித்து இருப்பதாக வரும் போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம். பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி