உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மணமகளுக்கு இலவசமாக பட்டுச்சேலை; இ.பி.எஸ்., தேர்தல் வாக்குறுதி

மணமகளுக்கு இலவசமாக பட்டுச்சேலை; இ.பி.எஸ்., தேர்தல் வாக்குறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கும்பகோணம்: ''தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்துடன் மணமகளுக்கு இலவசமாக பட்டுச்சேலை வழங்கப்படும்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வாக்குறுதி அளித்துள்ளார்.கும்பகோணத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில், இ.பி.எஸ்., பேசியதாவது: தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளுக்காக எந்த திட்டமும் இல்லை. மக்கள் சேவையில் முதன்மையான கட்சி என்றால் அ.தி.மு.க., தான். ஆட்சிக்கு வந்த பின் நெசவாளர்களுக்கு தரமான பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். கைத்தறி தொழில் மிகவும் நலிவடைந்துவிட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் விசைத்தறியாளர்களின் நலன் காக்கப்பட்டது. முடிந்த அளவுக்கு உங்களுக்கு நன்மை செய்யும் விதமாக, அ.தி.மு.க., ஆட்சி அமைந்த உடன் தாலிக்கு தங்கம் திட்டத்துடன் மணமகளுக்கு இலவசமாக பட்டுச்சேலை வழங்கப்படும். பாரம்பரியமாக நெசவுத்தறியில் ஈடுபடுவோரை வாழ வைக்கும் வகையில் அ.தி.மு.க., ஆட்சி அமையும் போது அரசு நடவடிக்கை எடுக்கும். அன்றைக்கு உற்பத்தி செய்யப்படும் துணிக்கு அன்றைய தினமே பணம் கொடுக்கும் நிலை உருவாக்கப்படும். இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Santhakumar Srinivasalu
ஜூலை 22, 2025 20:45

ஓட்டுக்காக எல்லா இலவசம் வரும். ஜனங்கள் ஏமாறக்கூடாது!


முதல் தமிழன்
ஜூலை 22, 2025 20:37

அள்ளி விடுங்கள். யார் பணம் மொய் எழுதன்னு? இவரு மகளிர் உதவித்தொகை 5000 ரூபாய் கொடுப்பதாக கடைசி நேரத்தில் அள்ளி விடுவார் பாருங்கள் அப்புறம் இருக்கு திராவிட மாடலுக்கு ....


Subburamu Krishnasamy
ஜூலை 22, 2025 19:44

Tamizhagam voters are easily prone for freebies culture. Most of the parties are cheating the voters by announcing unwarranted promises and making the voters as beggars Poverty is being exploited by political outfits


saravanan
ஜூலை 22, 2025 18:53

சார் தயவு செய்து இலவசம் கொடுப்போம்னு சொல்றவங்களுக்கு யாரும் ஒட்டு போடாதீங்க அவங்க எங்க இருந்து குடுப்பாங்கனு கொஞ்சம் யோசிங்க pls ......


Sudha
ஜூலை 22, 2025 17:37

தேர்தல் ஆணையம் விழித்து கொள்ள இதுவே தருணம்,, இந்த மாநிலமே உதாரணம்


Sudha
ஜூலை 22, 2025 17:35

எல்லாம் எந்த கட்சி கொடுக்கும்?


Mariadoss E
ஜூலை 22, 2025 17:25

கல்வி, சுகாதாரம் இவற்றை இலவசமாகக் கொடுங்கள். சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் போல உங்க பிஜேபி மத்திய அரசு நிதியை நிறைய வாங்கித் தருவேன் என்று வாக்குக் கொடுங்கள்.


Mariadoss E
ஜூலை 22, 2025 17:20

முதல்ல இலவசத்தை நிறுத்துங்க. ஒரு பக்கம் அரசாங்கம் கடன் அதிகரிப்பதாக குற்றம் சாட்டும் நீங்கள் இந்த திட்டம் அறிவிப்பது முறையா? உங்கள் முந்தைய ஆட்சியில் தான் தமிழ்நாட்டின் கடன் மிகவும் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


T.sthivinayagam
ஜூலை 22, 2025 17:19

பூரண மதுவிலக்கை பற்றி இதுவரை பாஜாகாவும் அதிமுகாவும் பேசவில்லை மதுவிலக்கை அமல்படுத்தினால் பட்டு புடவை அவர்களே வாங்கிவிடலாம்


Kulandai kannan
ஜூலை 22, 2025 16:27

முதலில் சட்டம்-ஒழுங்கு, வேலை வாய்ப்புகள், தரமான அரசு பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், லஞ்சமில்லா அரசு அலுவலகங்கள் பற்றி பேசுங்கள். கொள்கையே இல்லாத இலவசங்கள் அறிவிப்பதை நிறுத்துங்கள். ஆனால் அவற்றையெல்லாம் செய்வதற்கு கொள்கை என்ற ஒன்று இருக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை