உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுங்கச்சாவடிகளில் இலவசம் த.வெ.க., மாநாடு துளிகள்

சுங்கச்சாவடிகளில் இலவசம் த.வெ.க., மாநாடு துளிகள்

த.வெ.க., மாநாட்டிற்கு வாகனங்கள் அதிகளவில் சென்றதால், சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்காமல் விடுவிக்கப்பட்டது.த.வெ.க.,வின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்க, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கார், பஸ், வேன் என, பல்வேறு வாகனங்களில் தொண்டர்கள் திரண்டனர்.இதன் காரணமாக உளுந்துார்பேட்டை, விக்கிர வாண்டி, ஓங்கூர் ஆகிய மூன்று சுங்கச்சாவடிகளில் கட்டணமில்லாமல் அனுமதிக்கப்பட்டது.பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்றதால், கட்டணம் வசூலிக்க நிறுத்தினால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், 'ஜீரோ டிராபிக்' என்ற நிலையை ஏற்படுத்த கட்டணமில்லாமல் அனுமதிக்கப்பட்டது. ஆனால், திருவண்ணாமலை - திண்டிவனம் மார்க்கத்தில், செஞ்சி அடுத்த நங்கிலிகொண்டான் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி