உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து...: முன்னாள் கலெக்டர் நேரடி ரிப்போர்ட்

உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து...: முன்னாள் கலெக்டர் நேரடி ரிப்போர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விருதுநகர்: சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ள கூமாபட்டி கிராமம் குறித்து, அம்மாவட்ட முன்னாள் கலெக்டர், நேரில் சென்று புகைப்படம் எடுத்ததுடன், அந்த கிராமம் குறித்த தகவல்களை பதிவிட்டு உள்ளார்.தற்போது 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளத்தில் கூமாப்பட்டி என்ற பெயர் டிரெண்டாகி வருகிறது. அந்த கிராமத்தைச் இளைஞர் ஒருவர்,அணையில் குளித்தபடி, இயற்கை சூழலையும் காட்டியபடி தனது பாணியில் பேசியவாறு வீடியோ ஒன்றை வெளியிட, அது வைரலாக துவங்கியது.இதனை பார்த்த சிலர் அந்த கிராமத்திற்கு படையெடுக்க துவங்கி விட்டனர். இன்னும் பலர், கூமாபட்டி குறித்து வீடியோ வெளியிட துவங்கி உள்ளனர்.இந்நிலையில், கூமாபட்டி மாவட்டம் அமைந்துள்ள விருதுநகர் முன்னாள் கலெக்டர் ஜெயசீலன் அந்த கிராமம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். கடந்த 2023ம் ஆண்டு முதல் விருதுநகர் கலெக்டராக இருந்த அவரை கடந்த 23ம் தேதி சென்னை மாநகராட்சி இணை கமிஷனராக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து...நேற்றிலிருந்து நண்பர்கள் அழைத்து என்னடா விருதுநகர் கலெக்டராக இருந்து இப்படி இன்டர்நேஷனல் Exotic Destination கூமாபட்டிய எங்களிடம் காட்டாமல் விட்டு விட்டாய் என்று கோபித்துக் கொண்டார்கள் !எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாதான்டா இருக்கு பொறுங்க நாளைக்கு சும்மாதான் இருப்பேன். போய் பார்த்து போட்டோ எடுத்து போடுறேன் என்று சொன்னேன்..கூமாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள அழகான ஊர். பிளவக்கல் கோவிலாறு அணைகளுக்கு அருகில்,இரண்டு மிகப்பெரிய கண்மாய்களையும் கொண்ட ஆயக்கட்டுகள் நிறைந்த ஊர். மழைக்காலத்தில் கம்மாய்கள் நிரம்பி, கடல் போல் நிறைந்து, இயற்கை எழில் சூழ மிகுந்த ரம்மியமாய் காட்சியளிக்கும். https://x.com/jeyaseelan_vp/status/1938231833097109516 அந்த வைரல் வீடியோவில், தலைவன் சொன்னதை போல் காதல் தோல்விக்கு தீர்த்தமாகவோ, இல்லை காதல் செட்டாவதற்கு தைலமாகவோ இருக்குமா என்பது குறித்து எந்த ஆவணக் குறிப்புகளும் இல்லை. தலைவனின் மற்ற தகவல்கள் 'ரீல்'ஸ்காக மட்டுமே! மற்றபடி, இது போன்ற கிராமப்புற பகுதிகளில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் கிராம சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், அழுத்தமான நகர்ப்புர வாழ்வியலில் இருந்து இளைப்பாறவும் 100 சதவீத கியாரண்டி உள்ளஇடம். எதிர்காலத்தில் இது கிராமச் சுற்றுலா வசதிகளுடன் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கலாம்!கூமாபட்டி கண்மாயின் இன்றைய புகைப்படங்கள், கடைசி படம் கடந்த ஆண்டு நீர் நிரம்பியிருந்தபோது நான் எடுத்தது! மிகவும் ரம்மியமான பகுதி !! இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

David DS
ஜூலை 01, 2025 10:48

கூமாபட்டி கதையை நம்பி ஒரு ஐ.ஏ.எஸ் ஆபீசர் அங்க போய் போட்டோ எடுத்து போடுறாரு, வேற வேலையே இல்லையா. அருமை.


murugan murugan
ஜூன் 29, 2025 12:29

கூமாபட்டி முதல் வருசநாடு வரையிலான மலைப்பாதை முடிக்கப்பட்டு அதன் வழியாக போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டால் கூமாபட்டி இன்னும் மிகவும் முக்கியமான சுற்றுலா தளமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை


Padmasridharan
ஜூன் 27, 2025 12:52

அந்த ரம்மியம் இப்ப இல்லன்னுதானே அவரு ரீல்ஸ் போட்டு மத்தவங்களுக்கு காண்பிச்சிட்டாரு அவரு. .


Bhaskaran
ஜூன் 27, 2025 04:07

விரைவில் அந்த ஊர் ரெசார்ட் ஆக மாறிவிடும் .சூழல் சர்வ நாசம் உபயம் ஜீ சதுரர்கள்


எஸ் எஸ்
ஜூன் 26, 2025 20:50

டியர் கூமாபட்டியன்ஸ், உங்கள் ஊரின் இயற்கை அழகை யாரும் சிதைத்து விடாமல் பார்த்து கொள்ளுங்கள்


N Annamalai
ஜூன் 26, 2025 20:36

அருமை .பாராட்டுகள் .நன்றி .


Ramesh Sargam
ஜூன் 26, 2025 20:30

இந்த ரீல்ஸ் ஆல் நல்லதும் நடக்கலாம். கெட்டதும் நடக்கலாம். அது என்ன கெட்டது? ஆம், அந்த இடத்தை G-Square மொத்தமாக வாங்கி பல அடுக்குமாடி கட்டடங்களை கட்டி இயற்கை அழகை, அப்படியே concrete கட்டடங்களாக மாற்றலாம். அங்கே கருணாநிதிதிக்கும், பெரியாருக்கும் சிலை வைக்கலாம். இது தேவையா?


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 26, 2025 20:46

பேனா சிலையா பேப்பர் சிலையா


Raghavan
ஜூன் 26, 2025 21:48

லீடு கொடுத்துவிட்டிங்கள்ளே. நங்கள் ஒருகை பார்க்காமல் விடமாட்டோம். G ஸ்கொயர் இந்நேரம் அங்கே கூடாரமே போட்டுஇருப்பார்கள். அங்கு இருக்கிற VAO தாசில்தார் RDO சப் ரெஜிஸ்ட்ரார் எல்லாருக்கும் இந்நேரம் தகவல் போய் இருக்கும். எந்தகாரணத்தைக்கொண்டும் பட்டா, நிலம் ரெஜிஸ்டரேஷன் செய்ய வேண்டாம் என்று. இதற்கும் மேலே ஒருபடி சென்று மேற்படி காரர்கள் இந்த ஊரே வக் போர்ட்க்கு சொந்தம் என்று சொல்லிவிடுவார்கள். பாவம் அந்த ஊர் ஜனங்கள்.


Raghavan
ஜூன் 26, 2025 21:50

நல்லது நடக்க நாங்க என்றைக்கு விட்டோம்.


சசிக்குமார் திருப்பூர்
ஜூன் 26, 2025 22:34

அதைவிட முக்கியமாக மலையை வெட்டி கேரளாவுக்கு கடத்தாமல் இருப்பது


முக்கிய வீடியோ