| ADDED : மார் 12, 2024 11:08 PM
சென்னை:சென்னை நுங்கம்பாக்கம், அறநிலையத்துறை தலைமையகத்தில், தமிழக கோவில் பணியாளர்களுக்கான கட்டணமில்லா முழு உடற்பரிசோதனை திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.அறநிலையத்துறையினர் கூறியதாவது:அறநிலையத்துறை ஆலோசனை குழு தீர்மானங்களை நிறைவேற்றிடும் வகையில், 45,477 கோவில் பணியாளர்களுக்கு கட்டணமில்லா முழு உடற்பரிசோதனை திட்டம் சென்னை அப்பல்லோ மருத்துவமனை வாயிலாக நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக சென்னை மண்டலம் - 1, 2ல் உள்ள கோவில்களின், 1,277 பணியாளர்களுக்கு முழு உடற்பரிசோதனை நடத்தப்படுகிறது.இதில், ரத்தம், கண் பரிசோதனை, 'எக்ஸ்ரே, இ.சி.ஜி., எக்கோ, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்' ஆகிய பரிசோதனைகளும், சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. இம்முகாம் மூன்று நாட்கள் நடைபெறும். மற்ற மண்டலங்களின் கோவில் பணியாளர்களுக்கு முழு உடற்பரிசோதனை முகாம் ஆறு மாதத்திற்குள் நடத்தப்படும்.உலகம் முழுதும் உள்ள முருக பக்தர்கள் பங்கேற்கும் வகையில், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இரண்டு நாட்கள் நடத்தப்படும்.