உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காந்தியடிகள் காவலர் பதக்கம்

காந்தியடிகள் காவலர் பதக்கம்

நோக்கம்: கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு.விருது: பதக்கம் மற்றும் ரூ.40,000 மதிப்புக்கு காசோலை.பெற்றவர்கள்: விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னகாமனன்விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய தலைமைக் காவலர் மகாமார்க்ஸ்திருச்சி துறையூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைமைக் காவலர் கார்த்திக்சேலம் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் சிவா மற்றும் பூமாலை.

கோட்டை அமீர் விருது

நோக்கம்: மதநல்லிணக்கம் பேணுதல்.விருது: பாராட்டுப் பத்திரம் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்புக்கு காசோலை.பெற்றவர்: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அமீர் அம்சா. சாதனை: இவர் சொந்தமாக மாருதி ஆம்புலன்ஸ் வேன் வைத்து, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகிறார். இதுவரை 1,000க்கும் மேற்பட்ட ஆதரவற்ற பிரேதங்களை காவல்துறை உதவியுடன், இலவசமாக நல்லடக்கம் செய்துள்ளார். கொரோனா காலத்தில், 200க்கும் மேற்பட்ட பிரேதங்களை அடக்கம் செய்ததுடன், 700 பேருக்கு மருத்துவம் மற்றும் தேவையான உதவிகளை செய்துள்ளார்.

வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம்

நோக்கம்: வீர, தீர செயல்கள் புரியும் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு.விருது: தங்க முலாம் பூசிய பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சம் மதிப்புக்கு காசோலை.பெற்றவர்: சென்னை மாவட்டத்தை சேர்ந்த முன்னணி தீ அணைப்பு வீரர் வெற்றிவேல்.சாதனை: கடந்த நவ.,1ம் தேதி மாலை, அடையாறு மலர் மருத்துவமனை அருகே, அடையாறு ஆற்றில் உயிருக்குப் போராடிய மூவரை, இவரது தலைமையிலான மெரினா மீட்பு குழுவினரும், அவசரகால மீட்பு ஊர்தியும் விரைந்து செயல்பட்டு, காப்பாற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ