உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முன்னாள் அமைச்சர் உதயகுமார் அலுவலகம் முன் திடீர் குப்பைத்தொட்டி; வரியை வசூலிக்க மாநகராட்சி நடவடிக்கை

முன்னாள் அமைச்சர் உதயகுமார் அலுவலகம் முன் திடீர் குப்பைத்தொட்டி; வரியை வசூலிக்க மாநகராட்சி நடவடிக்கை

மதுரை: மதுரையில் தனியார் வணிக வளாகத்தின் வரி நிலுவையை வசூலிக்கும் முயற்சியாக அங்கு செயல்படும் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமாரின் அலுவலகம் முன் குப்பை தொட்டி வைத்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.இம்மாநகராட்சியில் தனியார் நிறுவனங்கள், குடியிருப்புகளில் ரூ. பல கோடி வரி நிலுவை உள்ளது. அதனை வசூலிக்க உதவி வருவாய் அலுவலர்களுக்கு கமிஷனர் சித்ரா இலக்கு நிர்ணயித்துள்ளார். அதிக வரி நிலுவை உள்ள நிறுவனங்கள், தனியார் கட்டடங்களில் வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ky2dzs0p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன்படி கே.கே.,நகர் வக்பு வாரிய கல்லுாரிக்கு எதிரே உள்ள ஒரு தனியார் காம்ப்ளக்ஸ் 2012 முதல் ரூ.9.13 லட்சம் வரி செலுத்தாமல் இருந்தது. மாநகராட்சி தரப்பில் பலமுறை வலியுறுத்தியும் வரி செலுத்தவில்லை. இதனால் பணியாளர்கள் காம்ப்ளக்ஸ் முன் குப்பை தொட்டி வைத்தனர்.

முன்னாள் அமைச்சர் உதயகுமார் அலுவலகம்

அந்த காம்ப்ளக்ஸ் தரைத்தளத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமாரின் அலுவலகம் பல ஆண்டுகளாக வாடகைக்கு செயல்படுகிறது. காம்ப்ளக்ஸ் பெயர் 'ஆர்.பி.,' என இருந்ததால் உதயகுமாருக்கு சொந்தமான அலுவலகம் முன் குப்பை தொட்டி வைக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து சில மணிநேரத்தில் குப்பை தொட்டியை அலுவலர்கள் அகற்றினர்.அதிகாரி ஒருவர் கூறியதாவது: டி.வி.பி.ராஜாவுக்கு சொந்தமான காம்ப்ளக்ஸ் ரூ.9.13 லட்சம் பாக்கி வைத்துள்ளது. காம்ப்ளக்ஸ் முன் பகுதியில் வாடகை அலுவலகங்கள், பின் பகுதியிலும் அலுவலகங்கள், வீடும் உள்ளது. இதனால் மூன்று வரியாக கணக்கிட்டு வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடை, வீடு என இரண்டு வரியாக கணக்கிட வேண்டும் என உரிமையாளர் வலியுறுத்தி 2012 முதல் வரி செலுத்தவில்லை. நிலுவையை வசூலிக்க குப்பை தொட்டி வைக்கப்பட்டது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

K.Ramakrishnan
மார் 19, 2025 23:47

மாநகராட்சியின் செயல் பாரபட்சமானது. ஒரு எம்.எல்.ஏ. அலுவலகம் இருப்பது தெரிய வந்ததும் குப்பைத் தொட்டியை அகற்றுகிறீர்கள். மற்றவர்கள் என்றால் இப்படி அகற்றுவீர்களா? ஏன் இந்த இரட்டை வேடம்?


VIDYASAGAR SHENOY
மார் 19, 2025 16:37

நோட் தி பாயிண்ட் டீ.ர்.பி ராஜா யார் அவர் மந்திரி போல


अप्पावी
மார் 19, 2025 10:44

வரிகட்டாதவங்களிடம் நடவடிக்கை எடுத்து வரி வசூலிக்கத் துப்பில்லாதவங்க தெருவில் குப்பைத் தொட்டியை நிறுத்தி பொதுமக்களுக்கு அவதி குடுக்கறாங்க. இவனுக்ஜெல்லாம் எவண் பாடம் சொல்லிக் குடுத்தான்? குப்பையைக்.கொண்டுபோய் அவன் ஆபீசுக்குள் கொட்டுங்க. தெருவையே நாற அடிக்காதீங்க.


kumaresan
மார் 19, 2025 09:19

தவறாமல் முறையாக வரி செலுத்தும் வீட்டிற்கு அருகிலும் பல ஆண்டுகளாக குப்பை கிடங்கிகளை வைத்து மக்களை மதுரை மாநகராட்சி பழி வாங்கியிருக்கிறது . அதற்க்காக அவர்களிடம் வசூலித்த வரியை திரும்ப கொடுக்க வேண்டும் .


R.RAMACHANDRAN
மார் 19, 2025 07:53

13 ஆண்டுகளாக வரி செலுத்தாமல் குடியிருக்கிறார்கள் நிறுவனங்களை நடத்துகிறார்கள் எனும் பொது லஞ்ச ஊழல் மிக்க அதிகாரிகளின் உதவி அவர்களுக்கு உள்ளது என்றே கொள்ள வேண்டும்.இவர்களுக்கெல்லாம் மாதம் தவறாமல் சம்பளம் ஒரு கேடு.


MUTHU
மார் 19, 2025 09:56

GST வரி தொழில் செய்தால்தான் கட்ட வேண்டும். நகராட்சி வரியெல்லாம் நாம் சும்மாயிருந்தாலும் கட்ட வேண்டியவை. எதில் கொள்ளை இருக்கும் என்று நினைத்து பாருங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை