உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தலைமை செயலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தலைமை செயலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை:'பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைமை செயலகத்தில், உணவு இடைவேளையின் போது, நேற்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சரண் விடுப்பு தொகையை விடுவிக்க வேண்டும்.நான்கரை லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக தலைமைச்செயலக ஊழியர்கள் சங்கம் சார்பில், தலைமை செயலக வளாகத்தில், நேற்று உணவு இடைவேளை நேரத்தில்,கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத் தலைவர் வெங்கடேசன் பேசியதாவது:தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றபோது இருந்த, நான்கு லட்சம் அரசு பணியிடங்கள், இப்போதும் காலியாக உள்ளன. அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. ஒன்று சேர்ந்து போராடினால்தான் வெற்றி கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை