உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பீசை பிடுங்கும் வேலை

பீசை பிடுங்கும் வேலை

கங்கை மாவட்டத்தின் மாமதுரை தொகுதியில், சூரிய கட்சி சார்பில் போட்டியிடும் அரசியானவர், 'வெற்றி பெற்றால், மாவட்டத்தின் அமைச்சர் நான் தான்' என்று சொல்லி ஓட்டு கேட்டுச் செல்ல, தகவல் தற்போதைய மாவட்ட அமைச்சர் கருப்பனிடம் சென்றதும் எரிச்சலாகி விட்டாராம். 'அந்தம்மாவின் பீசை பிடுங்கறது எனக்கு தெரியும்' என சொல்லி கொந்தளித்தாராம். கடைசி நேர பட்டுவாடாவுக்காக அரசியானவர் கருப்பனிடம் செல்ல, அவர் போக்கு காட்டுகிறாராம்.நீங்களே ஏறிக் கொள்ளுங்க சூரிய கட்சியிடம் இருந்து டெல்டா பகுதியின் நாசம் தொகுதியை கேட்டுப்பெற்ற ஏணி சின்னத்துக்காரரான ஹானுக்கு, தொகுதியில் கூட்டணி கட்சியினர் யாரும் ஒத்துழைப்பு அளிப்பதில்லையாம். குறிப்பாக, சூரிய கட்சியின் முன்னாள் மா.செ.,வான கல்யாணமானவரிடம் முறையிட, 'எந்த தைரியத்தில் தொகுதியை கேட்டு வாங்கி வந்தீர்கள். சொந்த செல்வாக்கில் ஏணியில் ஏறி செல்லுங்களேன்...' என சொல்ல, விபரம் சூரிய கட்சி தலைவரிடம் செல்ல, அவர் கண்டுகொள்ளவில்லையாம். சந்தோஷமில்லா தலைவர் 'உளவுத்துறை வரை, சூரிய கட்சியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. அத்தனை அதிகாரிகளையும் மாற்றாமல், தேர்தலை சந்தித்தால் தோல்வி உறுதி. அதனால், உடனே அனைவரையும் தேர்தல் ஆணையம் வாயிலாக மாற்றுங்கள்' என, டில்லியின் ஷா தலைவரிடம் முறையிட்டார் சாமியான இலை கட்சி தலைவர். ஆனால், ஷா தலைவர், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். பெயருக்கு ஓரிருவரை மட்டும் மாற்ற, இலை கட்சித் தலைவருக்கு சந்தோஷமில்லையாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை