உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேலை செய்யவில்லை என்றால் வீட்டுக்கு போகலாம்: ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள் மீது ஐகோர்ட் கிளை கோபம்

வேலை செய்யவில்லை என்றால் வீட்டுக்கு போகலாம்: ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள் மீது ஐகோர்ட் கிளை கோபம்

மதுரை: '' வேலையை செய்ய இயலவில்லை என்றால், அதிகாரிகள் வேலையை விட்டு விடலாம்,'' என ஐகோர்ட் மதுரை கிளை கூறியுள்ளது.கரூர் வெண்ணைமலை முருகன் கோயில் ஆக்கிரமிப்பை அகற்றாத விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இதனை விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி அமர்வு, அறநிலையத்துறையில் சம்பளம் பெற்றுக் கொண்டு ஏன் அறநிலையத்துறை சொத்துகளை பாதுகாக்கவில்லை? ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்ட பிறகும் ஆண்டுக்கணக்கில் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? எனக் கேள்வி எழுப்பியதுடன், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக கோயில் அதிகரிகள் செயல்பட்டால் அவர்களிடமே சம்பளம் பெறலாம். வேலையை செய்ய இயலவில்லை என்றால், அதிகாரிகள் வேலையை விட்டு விடலாம் எனக்கூறினர். மேலும், 2021 முதல் தற்போது வரை கோயிலில் பணியாற்றிய நிர்வாக அதிகாரிகள், இணை ஆணையர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Lion Drsekar
அக் 04, 2024 07:07

அப்படி ஆர்த்தால் மக்கள் மாமன்றத்துக்கு வராமலேயே இருக்கும் உறுப்பினர்கள், நடைபாதைல கடைகளை, வாகனங்களை நிறுத்தி வைப்பவர்கள் மீது, மக்களுக்கு இடையூறு செய்யும் விதத்தில் வானங்களை நிறுத்துதல் அதி வேகமாக ஒட்டி விபத்துக்களை ஏற்படுத்துவர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம், இதைவிட பணிசெய்யாமலேயே பணிசெய்யும் துறைகளும் உள்ளன எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் கட்டிட அனுமதி, அதற்கு மின்சாரம், குடிநீர், கழிவுநீர் வசதி கொடுப்பது போன்று பல குறைகள் அசுரர் வளர்ச்சி அடைந்து வருகிறது,


நீதிகுமார்
அக் 03, 2024 22:51

யாரோ வேலை செய்யாம இந்தியா முழுக்க லட்சக் கணக்குல கேசுங்க தேங்கி கிடக்குதாம் யுவர் ஆனர்.


Anantharaman Srinivasan
அக் 03, 2024 22:44

நீதிமன்றம் அதிகாரிகளை தான் சாட முடியும். மந்திரி சேகர்பாபுவை டச் பண்ண முடியாது. அதுதான் சட்டம்.


Ramesh Sargam
அக் 03, 2024 21:28

முதலில் அறநிலையத்துறை அமைச்சரை வீட்டுக்கு போக சொல்லவேண்டும்.


GMM
அக் 03, 2024 20:19

கோவில் நில அளவை அறிய நில உடைமை தாசில்தார், கோவில் பெயரில் உள்ள மொத்த நில விவரம் ஆரம்பம் முதல் தாக்கல் செய்ய முடியும். கோவில் பகுதியில் வசிக்கும் இந்து மக்கள் தகவல் உரிமையில் சேகரிக்கலாம். அதன் பின் நிலையில்லா அறநிலைய துறையிடம் கோவில் நிலம், ஆக்கிரமிப்பு விவரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு மாநில, மத்திய பொது பணி துறையை ஒப்பிட்டு பார்க்க கூற வேண்டும். நிலம் பற்றி ஞானம் இல்லாத அறநிலைய அதிகாரிகளை தான் திராவிடம் நியமித்து இருக்கும். இவர்களுக்கு எது கோவில் நிலம், ஆக்கிரமிப்பு நிலம் என்று கூட தெரியாமல் இருக்கலாம். தான நகை உருக்க, சிலை திருட்டு புகார் கொடுக்க, நில ஆக்கிரமிப்பு செய்தபின் புகார் கொடுக்க தான் வசதி, சம்பளம் மற்றும் பல. இவர்களை வேலை வாங்க முடியாது. அறநிலைய துறையை நாடு முழுவதும் கலைக்க வேண்டும். தெய்வ நம்பிக்கை அமைப்பை உருவாக்கி ஒப்படைக்க வேண்டும்.


narayanansagmailcom
அக் 03, 2024 20:08

உண்மையான மற்றும் கடமை உணர்வு மற்றும் சட்டத்தை மதிக்கும் ஒரு சில நீதிபதிகள் இன்னும் நம் சமுதாயத்தில் இருப்பது தெரிகிறது. அவர்கள் லஞ்ச பணத்துக்கு விலை போகாமல் கடமை செய்தால் நம் நாடு உண்மையிலேயே நல்ல நாடு என்ற பெயர் பேரும். செய்வார்களா. அரசியல்வாதிகள் இவர்களை கடமை செய்ய விடுவார்களா


panneer selvam
அக் 03, 2024 19:09

Honorable judges, please understand the predicament of government officials , they can not evict any illegal occupants since they are part and parcel of ruling party . If they antagonize the ruling party officials , then these honest officials will be harassed and put into difficulties . To get court protection , it will take not less than 25 to 30 years to get judgement in their favour. So better close the eyes and be a Tamil people who are too lazy to demand .


rama adhavan
அக் 03, 2024 21:54

தென் லெட் தெம் கோ ஹோம்.


sridhar
அக் 03, 2024 18:48

கோவப்படாதீங்க மை லார்ட், ஆக்கிரமிப்பாளர்கள் அரசுக்கு பிடித்த மாற்று மதத்துக்காரர்கள் . கடமை முக்கிய, மாற்று மதத்துக்காரர்கள் முக்கியமா .


raja
அக் 03, 2024 18:38

வேல செஞ்சா திருட்டு திராவிட மாடல் விடியலின் கோபத்துக்கு ஆளாகனும். செய்யலைன்னா நீங்க கோபப்படுறீங்க..என்னத்த செய்ய...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை