உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சரிந்தது தங்கம்

சரிந்தது தங்கம்

மதுரை : மதுரையில் இரு வாரங்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.117 குறைந்தது. ஆக.,15க்கு பின் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தது. ஆக.,17ல் ஒரு கிராம் தங்கம் ரூ.2477க்கு விற்கப்பட்டது. ஆக.,18ல் ரூ.2498, 19 ல் ரூ.2585, 20 ல் ரூ.2622க்கு விற்கப்பட்டது. ஆக.,21 விடுமுறை என்பதால் விலையில் மாற்றமில்லை.ஆக.,22 ல் ரூ.14 அதிகரித்து ரூ.2636க்கு விற்கப்பட்டது. ஆக.,23ல் ரூ.2661, ஆக.,24ல் ரூ.2581க்கு விற்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.117 குறைந்து ரூ.2464க்கு விற்கப்பட்டது.வியாபாரிகள் கூறுகையில், ''தங்கத்தில் முதலீடு செய்தவர்கள், அதை விற்க ஆரம்பித்துள்ளதால், தொடர்ந்து விலை குறையும் என எதிர்பார்க்கிறோம். இதை பயன்படுத்தி இப்போதே நகைகளை வாங்குவது தான் நல்லது,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை