உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் ரூ.64 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை

மீண்டும் ரூ.64 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு 80 ரூபாய் அதிகரித்துள்ளது.கடந்த சில நாட்களில் முன் எப்போதும் இல்லாத நிகழ்வாக ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. புதிய உச்சமாக ரூ.64 ஆயிரமாக கடந்தது.தொடர்ந்து, தங்கம் விலை உயர்ந்து வருவதால், நகை வாங்கும் எண்ணத்தை பொதுமக்கள் கைவிடும் சூழல் உருவாகியுள்ளது.நேற்று தங்கம் விலை ரூ.320 அதிகரித்த நிலையில், இன்றும் ரூ.80 அதிகரித்து ஷாக் கொடுத்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,990க்கும், பவுனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.63,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த 5 நாட்களில் (பிப். 10முதல் பிப்.14 வரை) தங்கம் விலை நிலவரம்;14/02/2025 - ரூ. 63,92013/02/2025 - ரூ. 63,84012/02/2025 - ரூ. 63,52011/02/2025 - ரூ. 64,08010/02/2025 - ரூ.63,840


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை