வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தால் நன்றாக இருக்கும். தங்கத்தில் முதலீடு செய்தால் இருந்தாலும் ஆயிரம் பொன் செத்தாலும் ஆயிரம் பொன்
சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று (நவ.,21) சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.57,160க்கும், ஒரு கிராம் ரூ.7,145க்கும் விற்பனை ஆகிறது.அக்டோபர் மாதம் துவக்கத்தில் இருந்து தங்கத்தின் விலையில் அதிரடியான ஏற்ற, இறக்கங்கள் நிலவியது. அக்.16ல் ஒரு சவரன் தங்க நகை ரூ.57 ஆயிரத்தையும், அடுத்தடுத்த நாட்களில் 58 ஆயிரத்தையும் தொட்டது. பின்னர் அக்.29ம் தேதி ஒரு சவரன் 59 ஆயிரம் ரூபாயை எட்டிப்பிடித்தது.தீபாவளி சீசன் விற்பனை முடிந்த நிலையில், தங்கம் விலையில் சரிவு ஏற்பட தொடங்கியது. பவுன் 2000 ரூபாய்க்கு மேலாக விலை சரிந்தது. ஆனால், இறங்கிய வேகத்தில் மீண்டும் விலை உயர தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் (நவ.,19) ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 65க்கும், ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்து 520க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று (நவ.,20) தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து, 7,115 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 56,920 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று (நவ.,21) தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்தது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,145க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,160-க்கும் விற்பனையாகிறது.கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1680 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை மீண்டும் தாண்டியதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தால் நன்றாக இருக்கும். தங்கத்தில் முதலீடு செய்தால் இருந்தாலும் ஆயிரம் பொன் செத்தாலும் ஆயிரம் பொன்