உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.58 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை; இன்று ஒரே நாளில் ரூ.640 அதிகரிப்பு

ரூ.58 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை; இன்று ஒரே நாளில் ரூ.640 அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்கள் கூட இல்லாத நிலையில், தங்கம் விலை ரூ.58 ஆயிரத்தை நெருங்கியிருப்பது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாலர் விலை உயர்வு, போர் உள்ளிட்ட சர்வதேச நிலவரங்களால் உள்நாட்டில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தங்கம் விலை கிராமுக்கு, 80 ரூபாய் உயர்ந்து, 7,240 ரூபாய்க்கும், சவரனுக்கு, 640 ரூபாய் அதிகரித்து, 57,920 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. இதன்மூலம் தங்கம் விலை இதுவரையில் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ. 1,160 அதிகரித்துள்ளது. இதேபோல, ஒரு கிராம் வெள்ளி ரூ.2 அதிகரித்து ரூ.105க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,000 உயர்ந்து ரூ.1,05,000க்கும் விற்பனையாகி வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Prakash V
அக் 18, 2024 19:56

Sirappu ?


skv srinivasankrishnaveni
அக் 18, 2024 12:14

நான் வாங்கினதே இலிங்க நேக்குப்பிடிக்கவே இல்லீங்க .என் கனவரின் வருவாய்க்குள் குடித்தனம் 500ரஸ் மாதவருவாய் நோ சான்ஸ் , ஆசையும் இல்லீங்க இந்த நொடிவரை இப்படியே இவ்ளோவருசம் நௌ 84வயசு thevaiye இல்லை விலைஉயர்வை கண்டுக்கறதே கிடையாது


sundarsvpr
அக் 18, 2024 11:08

தங்கம் வாங்குவது நல்லதுதான். திருக்கோயிலில் உள்ள ஆண்டவன் விரும்பவில்லை. சர்வ வல்லமையுள்ள அவனாலே தன் ஆபரணம் மாற்றப்படுகிறதா திருடு போகிறதா என்பதனை காணமுடியவில்லை. ஆண்டவனைவிட அரசியல்வாதிகள் கில்லாடிகள். திருக்கோயில்களுக்காக தங்கநகைகள் வாங்கவேண்டாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை