உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலையில் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.66 ஆயிரம்!

தங்கம் விலையில் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.66 ஆயிரம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 18) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப் பட்டுள்ளது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,250 விற்பனை ஆகிறது. தமிழகத்தில் கடந்த வெள்ளி கிழமை மார்ச் 14ம் தேதி, எப்போதும் இல்லாத வகையில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,300 ரூபாய்க்கும், சவரன் 66,400 ரூபாய்க்கும் விற்பனையானது. சனிக்கிழமை மார்ச் 15ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து, 8,220 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 640 ரூபாய் சரிவடைந்து, 65,760 ரூபாய்க்கு விற்கப்பட்டது.ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. வார துவக்க நாளான நேற்று (மார்ச் 17) தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 சரிந்து, ஒரு சவரன் ரூ.65,680க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (மார்ச் 18) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,250 விற்பனை ஆகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

anonymous
மார் 19, 2025 01:38

தங்க விலை உயர்வை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு மட்டும் மலிவு விலையில் அல்லது விலையில்லா பொருளாக வழங்க வேண்டும்.


தாமரை மலர்கிறது
மார் 18, 2025 18:55

உலகிலேயே அதிக தங்கம் வாங்குபவர்கள் இந்தியர்கள் தான். இந்தியாவின் பொருளாதாரம் மிக சிறப்பாக இருப்பதால், இந்தியர்கள் தங்கநகைகளை வாங்கி குவிக்கிறார்கள் . விளைவு தங்கத்தின் விலை உயர்வு.


Petchi Muthu
மார் 18, 2025 15:58

தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போவதை தவிர குறைய மாட்டேங்குது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை