வாசகர்கள் கருத்துகள் ( 2 )
வாழ்க
தங்கம் விலை ரூ10 ஆயித்துக்கு கீழே வரட்டும்
சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 03) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.72,640க்கு விற்பனை ஆகிறது.தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, ஆபரண தங்கம் கிராம், 8,920 ரூபாய்க்கும், சவரன், 71,360 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஜூன் 02) காலை தங்கம் விலை கிராமுக்கு, 30 ரூபாய் உயர்ந்து, 8,950 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 240 ரூபாய் அதிகரித்து, 71,600 ரூபாய்க்கு விற்பனையானது.நேற்று மதியம் மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 110 ரூபாய் உயர்ந்து, 9,060 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 880 ரூபாய் அதிகரித்து, 72,480 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு, 1,120 ரூபாய் உயர்ந்தது.இந்நிலையில், இன்று (ஜூன் 03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,080க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வாழ்க
தங்கம் விலை ரூ10 ஆயித்துக்கு கீழே வரட்டும்