உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை அதிகரிப்பு; சவரனுக்கு ரூ.1,140 உயர்வு

தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை அதிகரிப்பு; சவரனுக்கு ரூ.1,140 உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை: சென்னையில் இன்று (செப்டம்பர் 29) காலை 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது. மீண்டும் மாலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,770 ஆகவும், ஒரு சவரன் ரூ.86,160 ஆகவும் விற்பனை ஆகிறது.சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் அதிக முதலீடு செய்வது உள்ளிட்ட காரணங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (செப் 27) தங்கம் விலை கிராமுக்கு, 90 ரூபாய் உயர்ந்து, 10,640 ரூபாய்க்கும், சவரனுக்கு, 720 ரூபாய் அதிகரித்து, 85,120 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7w9k7qr6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று (செப் 29) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.85,600க்கும், கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ஒரு கிராம் ரூ.10,700க்கும் விற்பனை செய்யப்பட்டது. மாலை மீண்டும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்தது. இதனால், ஒரு கிராம் ரூ.10,770 ஆகவும், ஒரு சவரன் ரூ.86,160 ஆகவும் விற்பனை ஆகிறது. தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு, ரூ 1,140 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.86 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் தொட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தாமரை மலர்கிறது
செப் 29, 2025 19:14

தங்கத்தின் வரியை ஐந்திலிருந்து இருபது சதவீதமாக உடனடியாக மத்திய அரசு உயர்த்த வேண்டும். அது தான் தங்கம் விலை உயராமல் இருக்க ஒரே வழி. மக்கள் தங்கமோகத்தில் இருக்கிறார்கள். சிறப்பான பொருளாதாரத்தால், ஜிஎஸ்டி குறைந்துள்ளதால், நிறைய சேமிக்கிறார்கள். அந்த பணத்தை தங்கத்தால் முதலீடு செய்கிறார்கள். தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே செல்கிறது. ஆனால் பிற தொழில்கள் படுத்து கிடக்கிறது.


ஆரூர் ரங்
செப் 29, 2025 21:57

வரியை அதிகரித்தால் கடத்தல் அதிகமாகும். அமைதி ஆட்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். இது நெடுநாளைய அனுபவம்.


kumar
செப் 29, 2025 10:45

தங்கம் விலை குறைய வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை