உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு வழியாக குறைய துவங்குகிறது தங்கம் விலை: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 சரிவு

ஒரு வழியாக குறைய துவங்குகிறது தங்கம் விலை: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 சரிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.52,920க்கு விற்பனை ஆகிறது. அட்சய திருதியை (மே 10) நெருங்கிவரும் நிலையில் தங்கம் விலை குறைந்ததால் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டு வருகிறது. அதன் படி, ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயருமா? அல்லது இறங்குமா? என்ற ஏக்கத்தில் சாமானிய மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 3) சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.52,920 ஆக விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.100 சரிந்து ரூ.6,615க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரும் 10ம் தேதி அட்சய திருதியை வரவுள்ள நிலையில் தங்கம் விலை ஓரளவு குறையத் துவங்கியதால் பலர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.87க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.87,000க்கு விற்பனையாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sampath Kumar
மே 03, 2024 12:02

இந்த தங்கம் விலை ஏறும் இருக்கும் இந்து நிலை ஆனது அல்ல இதில் பொய் காசு போடும் அறிவு கேட்ட எரிகற்கள் உள்ளவரை இதுக்குமதிப்பு குறையாது பதிலாக இரும்பில் போட்டால் மிக்க நல்லது செய்யமாட்டார்கள் யாரு நல்ல வெள்ளி செய்வானோ அவனை கசக்கி பில்லிவர்கள் ஏவல் மின்னிகிட்டு திரிகிண்டறனோ அவனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் என்ன விசித்திரமான உலகம் டா இது


கத்தரிக்காய் வியாபாரி
மே 03, 2024 11:40

ஏறும்போது கிராமுக்கு ஏறும் தங்கம் இறங்கும்போது சவரனுக்கு இறங்குகிறது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை