வாசகர்கள் கருத்துகள் ( 1 )
December 31, 2023 22 carat gold cost ₹5,855 per gram and 24 carat gold cost ₹6,387 per gram
சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.56,320க்கும், ஒரு கிராம் ரூ.7,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில், சவரனுக்கு ரூ. 880 குறைந்துள்ளது.தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், புது வருட பிறப்பு ஆகிய காரணங்களால் தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் விரும்புகின்றனர். தங்க நகை கடைகளில் விற்பனையும் சற்று அதிகரித்து உள்ளது. டிச., 18ம் தேதி சவரனுக்கு, 120 ரூபாய் குறைந்தது. அதன் படி ஒரு கிராம் ரூ.15 குறைந்து, ரூ.7,135க்கும், சவரன் 120 ரூபாய் குறைந்து ரூ.57,080க்கும் விற்பனை செய்யப்பட்டது.நேற்று (டிச.,19) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு, 520 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 56,560 ரூபாய்க்கும், ஒரு கிராமுக்கு ரூ.65 குறைந்து, ரூ.7,070க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (டிச.,20) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. ஒரு சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.56,320க்கும், ஒரு கிராமுக்கு ரூ.30 குறைந்து, ரூ.7,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில், சவரனுக்கு ரூ. 880 குறைந்துள்ளது.இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 10 நாட்களாக (டிச.10 முதல் டிச.20) நிலவிய தங்கம் விலை விவரம் வருமாறு;டிச.10 - ரூ.57,640டிச.11 - ரூ. 58,280டிச. 12 - ரூ.58,280டிச. 13 - ரூ. 57,840டிச.14 - ரூ. 57,120டிச.15 - ரூ. 57,120டிச.16 - ரூ. 57,120டிச.17 - ரூ. 57,200டிச.18- ரூ. 57,080டிச.,19 - ரூ.56,560 டிச.,20- ரூ.56,320
December 31, 2023 22 carat gold cost ₹5,855 per gram and 24 carat gold cost ₹6,387 per gram