வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மக்கள் வாங்குவதை நிறுத்தினால் அவர்கள் அடங்குவார்கள்
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிகரித்திருப்பது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களில் முன் எப்போதும் இல்லாத நிகழ்வாக ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. புதிய உச்சமாக ரூ.64 ஆயிரமாக கடந்தது.தொடர்ந்து, தங்கம் விலை உயர்ந்து வருவதால், நகை வாங்கும் எண்ணத்தை பொதுமக்கள் கைவிடும் சூழல் உருவாகியுள்ளது. நேற்று தங்கம் விலை ரூ.960 சரிந்து நகை பிரியர்களை சற்று ஆறுதல் கொடுத்தது. இந்த நிலையில், இன்று ரூ.320 அதிகரித்து ஷாக் கொடுத்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,980க்கும், பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.63,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் (பிப். 9முதல் பிப்.13 வரை) தங்கம் விலை நிலவரம்;13/02/2025 - ரூ. 63,84012/02/2025 - ரூ. 63,52011/02/2025 - ரூ. 64,08010/02/2025 - ரூ.63,84009/02/2025 - ரூ. 63,560
மக்கள் வாங்குவதை நிறுத்தினால் அவர்கள் அடங்குவார்கள்