உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை 2வது முறையாக உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,480 அதிகரிப்பு

தங்கம் விலை 2வது முறையாக உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,480 அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 09) காலை ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.520 உயர்ந்த நிலையில், தற்போது மீண்டும் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் 67,280 ரூபாய்க்கு விற்பனையாகிறது.தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 07), 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 8,285 ரூபாய்க்கும், சவரன், 66,280 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஏப்ரல் 08) தங்கம் விலை கிராமுக்கு, 60 ரூபாய் குறைந்து, 8,225 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 480 ரூபாய் சரிவடைந்து, 65,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது.இந்நிலையில், இன்று (ஏப்ரல் 09) காலை ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது. அதன்படி ஒரு கிராம் ரூ. 8290க்கும், ஒரு சவரன் ரூ.66,320க்கும் விற்பனை செய்யப்பட்டது. மதியம் சவரனுக்கு ரூ.960 உயர்ந்தது. ஒரு சவரன் 67,280 ரூபாய்க்கு விற்பனையாகிறது.ஒரு கிராம் ரூ.8,410க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஓரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்து நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

R S BALA
ஏப் 09, 2025 16:29

தமிழகத்தில்தான் இந்த விலையா மும்பை டெல்லி கொல்கத்தாவுளெல்லாம் ரேட் எப்புடி..


ديفيد رافائيل
ஏப் 09, 2025 16:08

நான் தான் சொன்னேன்ல 600 rupees price கம்மி பண்றப்பவே.


kamal 00
ஏப் 09, 2025 15:33

தொலையட்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை