உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை கிடுகிடு உயர்வு; ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்தை தாண்டியது!

தங்கம் விலை கிடுகிடு உயர்வு; ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்தை தாண்டியது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 17) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,360க்கு விற்பனை ஆகிறது.தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 15), தங்கம் கிராம், 8,720 ரூபாய்க்கும், சவரன், 69,760 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஏப்ரல் 16) தங்கம் விலை கிராமுக்கு, 95 ரூபாய் உயர்ந்து, 8,815 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 760 ரூபாய் அதிகரித்து, 70,520 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று (ஏப்ரல் 17) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,360க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ. 105 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 8,920க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்தை கடந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
ஏப் 17, 2025 19:15

தங்கம் விலையேற காரணம் டாலரின் மதிப்பு வீழ்ச்சி. ஆனா ரூவா மதிப்பு அதுக்கு மேலே வீழ்ச்சி. மக்கள் சம்பாரிக்கும் பணத்துக்கு மதிப்பில்லை. சீனாவும் இப்பிடித்தான் நிறைய கடன்வாங்கி கட்டி இப்போ கடனில் தத்தளிக்குது.


A.Gomathinayagam
ஏப் 17, 2025 14:15

தங்கம் அனைவருக்குமானது என்ற நிலை மாறி பணம் படைத்தவர்களுக்கே என மாறி வருகிறது


இளந்திரையன் வேலந்தாவளம்
ஏப் 17, 2025 12:34

நகை வாங்க நினைப்பவர்களுக்கு அதிர்ச்சி... தங்கம் பாரம்பரியமாக கையிருப்பு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி


ديفيد رافائيل
ஏப் 17, 2025 11:44

நான் தான் சொன்னேன்ல 280 rupees price கம்மி பண்ணி 2000 rupees increase பண்ணுவானுங்கன்னு இந்த fraudsters


V.Mohan
ஏப் 17, 2025 11:04

அப்பாவின்கிற பேர்ல கருத்து விடியல் சம்பள விசுவாசியே மத்திய பாஜக அரசுக்கும் தங்கம் விலை ஏறுவதற்கும் சம்பந்தமில்லாமல் முடிச்சு போட்டு பேசும் அறிவாளி- தமிழக அரசு விற்கும் போதை சாராயத்துக்கும், தமிழ் நாட்டுல நடக்கும் வெட்டவெளி அரிவாள் வெட்டுகள் மற்றும் பாலியல் குற்றங்களுக்கும், அமைச்சர்களின் ஆபாச பேச்சுக்களுக்கும் சரியான சம்பந்தம் இருப்பதாக எல்லா எதிர்கட்சிகள் கூறுவதெல்லாம் அக்மார்க் உண்மை என்பதை முதலில் ஒப்புக்கொண்டால் தான் தமிழ்நாடு உருப்படும். தங்கம் விலை பற்றி கமெண்ட் அடிக்கும் நபர் மனசாட்சி உள்ளவராக தெரியவில்லை


அப்பாவி
ஏப் 17, 2025 10:24

பொருளாதாரம் ஓஹோ ஒஹோன்னு வளர்ச்சி அடைஞ்சு மக்களிடம் காசு புழங்கி, தங்கத்தை வாங்க முண்டியடிக்கிறாங்க.


புதிய வீடியோ