உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை உச்சம் தொடும்; தனுஷ்கோடியை புயல் தாக்கும்: பஞ்சாங்கம் வாசிப்பில் தகவல்

தங்கம் விலை உச்சம் தொடும்; தனுஷ்கோடியை புயல் தாக்கும்: பஞ்சாங்கம் வாசிப்பில் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமேஸ்வரம்: 'தங்கம் விலை உச்சம் தொடும்; தனுஷ்கோடியில் புயல் பாதிப்பு ஏற்படும்' என, ராமேஸ்வரம் கோவிலில், விசுவாவசு பஞ்சாங்கம் வாசித்த போது தெரிவிக்கப்பட்டது.தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், சிறப்பு பூஜை முடிந்ததும், குருக்கள் சிவமணி பஞ்சாங்கம் வாசித்தார்.

அதில் கூறியிருப்பதாவது:

நம் நாட்டில் அதிகமான மழை, வெயில், குளிர் நிலவும். விவசாயம் செழித்து விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். உலகளவில் அரசியல் மாற்றம் ஏற்படும். மத மோதல்கள் மற்றும் நாடுகளிடையே போர் மூளும் அபாயம் உள்ளது. இஸ்ரேல், பாலஸ்தீனம் போர் நீடிக்கும். மத்திய, மாநில அரசுகள் புதிய சட்டங்களை இயற்றும். தங்கம், வெள்ளி விலை உச்சம் தொடும்; வைரம் விலை குறையும். ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடலில் கொந்தளிப்பும், புயலும் வீசக்கூடும். 1 கி.மீ., தூரத்திற்கு கடல் உள்வாங்கி மீன்கள் பாதிக்கப்படும். சென்னை, புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யும். புதிய வைரஸ் நோய்கள் பரவும். இவ்வாறு பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kalimuthu senthamarai kannan
ஏப் 15, 2025 23:31

வரும் ஆண்டு மழை பெய்யணும், மக்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். துன்பம் விலகவேண்டும்,


R S BALA
ஏப் 15, 2025 15:45

ஏற்கனேவே நடந்து முடிஞ்சத சொன்னால் எப்படி? இனி நடக்க போவதை கூறுங்கள்..


அப்பாவி
ஏப் 15, 2025 09:31

பலே... உலகநாடுகள், ட்ரம்ப் டாரிஃப், மத சண்டைகள்னு எப்பவோ நமது முன்னோர்கள் குறிச்சு எழுதி வெச்சுட்டுப்போயிருக்காங்க. ஆனா நம்ம ஊர் ஜாதி வெறி, குத்து, வெட்டு கொலைகள் பத்தி ஒண்ணுமே எழுதலை.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 15, 2025 10:38

இயற்கையாக மனிதர்கள் ஜெனரேஷன் கேப் விளைவாக உருவாகும் சண்டைகள் பற்றிய குறிப்புகள் கூறலாம். அதில் பலது நடக்காமல் போகவும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால் நமது நாட்டில் உருவாகும் ஜாதி வெறி குத்து வெட்டு கொலைகள் இயற்கையாக மனித இயல்புகள் சமுதாயத்தில் காலத்திற்குகேற்ப ஏற்படுபவைகள் அல்ல. இவைகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட மனிதர்கள் சுயநலத்திற்காக செயற்கையாக உருவாக்கப்படுபவை. செயற்கையாக வேண்டும் என்றே உருவாக்கப்படும் மத சண்டைகள் ஜாதி சண்டைகள் பற்றி யாராலும் முன் கூட்டியே அறிந்து சொல்ல முடியாது. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாதோ அது போலவே ஜாதி மத வெறி அரசியல் வாதிகள் திருந்தினால் தான் ஒழிக்க முடியும். அரசியல் வாதிகள் மண்ணாசை பெண்ணாசை ஒழித்து திருந்தாவிட்டால் ஜாதி மத இன பேதம் ஒழிக்க முடியாது. ஒழிக்கவே முடியாது. நாடு நாசமாகப் தான் போகும்.


சமீபத்திய செய்தி